வேளாண் பட்ஜெட்; தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் திடீர் ஆலோசனை!

 

வேளாண் பட்ஜெட்; தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் திடீர் ஆலோசனை!

வேளாண் பட்ஜெட் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக பட்ஜெட் வரும் 13ம் தேதி சட்டபேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் வேளாண் மற்றும் பொது பட்ஜெட் என தனித்தனியாக தாக்கல் செய்யப்பட உள்ளது. திமுக அரசு தாக்கல் செய்யும் பட்ஜெட்டை பார்க்க அரசியல் கட்சிகள் அனைத்தும் வழிமேல் விழி வைத்துக் காத்துக் கிடக்கின்றன.

வேளாண் பட்ஜெட்; தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் திடீர் ஆலோசனை!

இங்கு தான் திமுக அரசு டிவிஸ்ட் வைத்தது. பட்ஜெட்டை வெளியிடுவதற்கு முன்பாக வரும் 9ம் தேதி, கடந்த 10 ஆண்டுகால நிதிநிலை பற்றிய வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என திமுக அரசு அறிவித்தது. 120 பக்கங்கள் கொண்ட வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிடுகிறார். அதில், முந்தைய அதிமுக அரசின் செயல்பாடுகள், கடன்கள், நிதி ஆதாரங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இடம்பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், வேளாண் பட்ஜெட் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் எம்ஆர்கே பன்னீர்செல்வம், பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். அனைத்து மாவட்ட விவசாய சங்க பிரதிநிதிகளுடன் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. வேளாண் துறைக்கு முதல்முறையாக தனி பட்ஜெட் வரும் 14ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.