நவ.23ல் திமுக உயர்நிலை செயல் குழு கூட்டம்!

 

நவ.23ல் திமுக உயர்நிலை செயல் குழு கூட்டம்!

திமுக உயர்நிலை செயல்திட்ட குழுக் கூட்டம் வரும் 23ம் தேதி கூடுகிறது என்று தலைமை கழகம் அறிவித்துள்ளது.

நவ.23ல் திமுக உயர்நிலை செயல் குழு கூட்டம்!

தமிழகத்தில் 2021 சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளில் திமுக – அதிமுக போன்ற பிரதான கட்சிகள் தொடங்கியுள்ளன. அதேபோல் தேர்தலுக்கு முக்கிய பணியான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூ உத்தரவின் பேரில் அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளால் வெளியிடப்பட்டது.

நவ.23ல் திமுக உயர்நிலை செயல் குழு கூட்டம்!

இந்நிலையில் திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார் . இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் , திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் வருகிற 23ம் தேதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் நடைபெறும் என்றும் இக்கூட்டத்தில் உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டு கொண்டுள்ளார். அத்துடன் இக்கூட்டத்தின் நோக்கம் கழக ஆக்கப்பணிகள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.