Home அரசியல் திமுக கெடுபிடி – மதிமுக, விசிக ரகசிய ஆலோசனை

திமுக கெடுபிடி – மதிமுக, விசிக ரகசிய ஆலோசனை

‘குரங்குக் குட்டியை விட்டு ஆழம் பார்ப்பது போல’ என்பார்களே…அந்த மாதிரி இருக்கிறது திமுகவின் சமீபகால செயல்பாடுகள்.
இதன் ஒரு பகுதியாக வரும் சட்டசபை தேர்தலில் திமுக 200 இடங்களில் போட்டியிடப் போவதாக முதலில் செய்தி கசியவிடப்பட்டது. ’அப்படியானால் தங்களுக்கு மீதமுள்ள 34 தொகுதிகள்தானா!’ என அந்தக் கூட்டணியில் இருக்கும் அரை டஜனுக்கும் மேற்பட்ட கட்சிகள் கொதிக்க ஆரம்பித்தன. இது தொடர்பாக ஊடகங்களிலும் விவாதங்கள் அரங்கேறி சூட்டைக் கிளப்பின. உடனடியாக திமுக தலைவர் ஸ்டாலின் வழக்கம்போல ’இது எதிரணியின் சதி’ என சாமாளிக்க முயற்சித்தார்.


இப்போது அடுத்தக் கட்டம். திமுக தேர்தல் வியூக பொறுப்பாளர் பிரசாந்த் கிஷோர் அண்மையில் ஸ்டாலினை சந்தித்துப் பேசியிருக்கிறார். அப்போது திமுக அதிக தொகுதிகளில் போட்டியிட்டே ஆக வேண்டும் என்கிற தனது நிலைப்பாட்டை கிஷோர் மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியிருக்கிறார். ’இப்படி செய்தால் கூட்டணி கட்சிகள் அதிருப்தியடையுமே!’ என ஸ்டாலின் சொல்ல, நீண்ட விவாதத்திற்கு பிறகு ஒரு இறுதி முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.
இதன்படி கடந்த எம்.பி தேர்தலில் ஒவ்வொரு கூட்டணி கட்சியும் வெற்றிபெற்ற இடங்களுக்கு தலா 3 முதல் 4 இடங்கள் வரை தருவது என முடிவெடுக்கப்பட்டது.

காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் தவிர, மற்ற கட்சிகள் பாதி இடங்களில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் ; மீதி இடங்களில் விரும்பும் சின்னத்தில் போட்டியிட்டுக் கொள்ளலாம் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவுக்கு கூட்டணி கட்சிகள் எப்படி ரெஸ்பான்ஸ் செய்யும் என்பதை தெரிந்துகொள்ளும் ஆவலில் இது தொடர்பான செய்திகளை சில பத்திரிகையாளர்கள் மூலம் கசிய விட்டிருக்கின்றனர். செய்தியறிந்து கூட்டணி கட்சிகள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக மதிமுக, விசிகவில் திமுகவிற்கு எதிரான அதிருப்தி அலை அதிகமாக இருக்கிறது.


‘’ திமுக பார்முலாபடி நாம இரண்டு மூன்று இடங்களில்தான் ஒரே சின்னத்தில் போட்டியிட முடியும். மற்றபடி உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட்டாக வேண்டும்.இப்படி நம்பவெச்சு கழுத்தை அறுக்கிறாங்களே!’’ என கொதிக்கிறார்கள் இந்த கட்சிகளைச் சேர்ந்தவர்கள்.
திமுக தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் பட்சத்தில் அடுத்து எந்த மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது பற்றி மதிமுக, விசிக தலைவர்கள் ரகசிய ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நடவடிக்கைகளில் தங்களுடன் இணைந்து செயல்படுமாறு கம்யூனிஸ்ட், முஸ்லீம் லீக் உள்ளிட்ட இயக்கங்களுக்கும் இரு கட்சிகளின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட செய்திகள்

Most Popular

தமிழகத்தில் மேலும் 540 பேருக்கு கொரோனா, 4 பேர் உயிரிழப்பு

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 9கோடியே 92 ஆயிரமாக அதிகரித்துள்ளது. 20 லட்சத்து 13ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு...

“தியாகத் தலைவி சின்னம்மா விடுதலையாகிறார்” – தேதி சொல்லும் டிடிவி தினகரன்

சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி பெங்களூருவிலுள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் தண்டனைக் காலம் முடிவடைந்து ஜன.27ஆம் தேதி விடுதலையாவார் என சிறை நிர்வாகம் தெரிவித்திருந்தது.

அரசுவேலை வாங்கி தருவதாக ரூ.4 லட்சம் மோசடி- பெண் உள்பட இருவரிடம் விசாரணை

மதுரை மதுரையில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 4 லட்சம் ரூபாய் மோசடி செய்த புகாரில் பெண் உள்ளிட்ட இருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி...

அண்ணாத்த ரிலீஸ் தேதி அறிவிப்பு

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் ரஜினியின் 168 வது திரைப்படத்திற்கு அண்ணாத்த என்று பெயரிடப்பட்டுள்ளது.  இப்படத்தை  சன் பிக்சர்ஸ் தயாரித்துவருகிறது.  இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி,...
Do NOT follow this link or you will be banned from the site!