தத்தளிக்கும் பி.கே வியூகம்! திமுகவின் தேர்தல் வெற்றி நனவாகுமா?

 

தத்தளிக்கும் பி.கே வியூகம்! திமுகவின் தேர்தல் வெற்றி நனவாகுமா?

பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனம் சென்னையில் ஒரு ஆபீஸ் போட்டு திமுகவுக்காக கடந்த பிப்ரவரி முதல் பணியாற்றி வருகிறது. மேலும் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பணியாளர்களை நியமித்து முழுக்க முழுக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திமுகவுக்காக வேலை செய்து வருகின்றனர். இதில் கட்சி சாராதவர்கள் பணியில் இருப்பதால் எதிர் விளைவுகளையும் திமுக சந்தித்து வருகிறது. திமுகவுக்கு எதிரான கட்சியினரிடம் ஐ-பேக் ஊழியர்கள் தொலைபேசியில் பேசுவது சமூக ஊடகங்களில் வெளியாகி திமுகவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது.

இதெல்லாம் போக இந்தத் தேர்தலில் திமுக ஜெயித்தால் ஜனநாயகம் என்பதும், மக்களுக்கும், அரசியல்வாதிகளுக்குமான நேரடி தொடர்பு என்பதும் கானல் நீராகி விடும் எனவும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர். அதாவது இத்தேர்தலில் திமுக வென்றால் பிரசாந்த் கிஷோர் வியூகம் வென்றதாக உரத்தக் குரல் எழும்பும். அதன் பின்பு தேர்தல் என்றாலே இது போன்ற மார்கெட்டிங் கம்பெனிக்கு மட்டுமே வசூல் கொள்முதல் கிடைக்கும்

தத்தளிக்கும் பி.கே வியூகம்! திமுகவின் தேர்தல் வெற்றி நனவாகுமா?

ஐ-பேக், தகவல் தொழில்நுட்ப அணி தவிர, திமுக இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனக்கென தனியாக ஒரு குழுவை அமைத்து செயல்படுகிறார். அவர்களுக்கு தகவல் தொழில்நுட்ப அணியின் துணைச் செயலாளர் கார்த்திக் மோகன் பொறுப்பாளராக இருக்கிறார். மேலும் விகடன் பத்திரிக்கையும் உதயநிதிக்கு ஆதரவாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

இப்படி செயல்படும் திமுகவுக்கு போட்டியாக அதிமுகவும் களமிறங்கியுள்ளது. அதிமுகவில் தகவல் தொழில்நுட்ப அணி 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு சென்னை மண்டலத்துக்கு அஸ்பயர் கே.சுவாமிநாதன், வேலூர் மண்டலத்துக்கு கோவை சத்யன், கோவை மண்டலத்துக்கு சிங்கை ஜி.ராமச்சந்திரன், திருச்சி மண்டலத்துக்கு பி.வினுபாலன், மதுரை மண்டலத்துக்கு விவிஆர்ராஜ் சத்யன் ஆகியோர் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அதிமுக அணியில் பிரசாந்த் கிஷோரின் ஐ பேக் ஸ்லீப்பர் செல் இரண்டு பேர் இருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் மூலம் தேர்தல் போக்கை மாற்ற பி.கே திட்டமிட்டுவருகிறார். ஆனால் அவரின் முயற்சியை முறியடிக்க புதிதாக ஒரு சீனியர் ஜர்னலிஸ்ட் டீம் உருவாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.