சுற்றுச்சூழல் திட்டமதிப்பீடு விவகாரம்: நாடாளுமன்ற நிலைக்குழுவை கூட்ட திமுக கடிதம்

 

சுற்றுச்சூழல் திட்டமதிப்பீடு விவகாரம்: நாடாளுமன்ற நிலைக்குழுவை கூட்ட திமுக கடிதம்

மத்திய அரசு EIA எனும் புதிய திட்டத்திற்கான வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதனால் விவசாயமும் இயற்கை வளங்களும் பெரிதும் பாதிக்கப்படும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் புதிய சூழலியல் தாக்க மதிப்பீடு 2020 ஆம் ஆண்டு வரைவு சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு எதிரானது எனப் பலரும் சமூக ஊடகங்களில் கருத்தாகவும் வீடியோவாகவும் பதிவிட்டு வருகின்றனர். இதனால் #TNRejectsEIA2020, #ScrapEIA ஆகிய ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் டிரெண்டாகி எல்லோரின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. நெட்டிசன்கள் மட்டுமல்லாது பல தரப்பினர் EIA 2020க்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சுற்றுச்சூழல் திட்டமதிப்பீடு விவகாரம்: நாடாளுமன்ற நிலைக்குழுவை கூட்ட திமுக கடிதம்

இந்த நிலையில், நாடாளுமன்ற நிலைக்குழுவை கூட்ட வேண்டும் என்று திமுக கடிதம் எழுதியுள்ளது. சுற்றுச்சூழல் திட்டமதிப்பீடு விவகாரம் பற்றி ஆலோசிக்க நாடாளுமன்ற நிலைக்குழுவை கூட்ட வேண்டும் என நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் ஜெய்ராம் ரமேஷுக்கு திமுக எம்பி ஆர் எஸ் பாரதி கடிதம் எழுதியுள்ளார். மேலும், நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஒப்புதலின்றி சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு விவகாரத்தில் முடிவெடுக்க கூடாது என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.