ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று சந்திக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின்

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று சந்திக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின்

திமுக தலைவர் ஸ்டாலின் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று சந்திக்கிறார்.

ஆளும் அதிமுக அரசை தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் எதிர்கட்சியான திமுக, துறை ரீதியாக டெண்டர் முறைகளில் அதிமுக அரசு ஊழல் செய்து வருவதாக கூறி வருகிறது. அதேசமயம் திமுக 2ஜி வழக்கு மற்றும் சர்க்காரியா கமிஷன் அறிக்கை உள்ளிட்ட வழக்குகளில் ஊழல் செய்து உள்ளதாக முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் தொடர்ந்து தங்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று சந்திக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின்

சமீபத்தில் அரியலூரில் ஆய்வு கூட்டம் நடத்திய முதல்வர் பழனிசாமி, 2ஜி வழக்கு குறித்து பேசியதன் விளைவாக அவருக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் திமுக எம்.பி. ஆ.ராசா பேட்டியளித்திருந்தார். அதில் உங்க ஆத்தா ஒரு கொள்ளைக்காரி நீங்களும் அப்படி கொள்ளையடிக்க தான் அவரின் பெயரை சொல்லி வருகிறீர்களா என்பது போன்று விமர்சனத்தை முன்வைத்திருந்தார்.

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று சந்திக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின்

இதற்கு முதல்வரும், அதிமுக அமைச்சர்களும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். அத்துடன் ஆ. ராசா மீது முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இப்படி திமுக மீது அ திமுகவும், அதிமுக மீது திமுகவும் மாறி மாறி ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று சந்திக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின்

இந்நிலையில் சென்னை ராஜ் பவனில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு சந்திக்கிறார். தமிழக அரசின் சில ஊழல் புகார் தொடர்பாக ஸ்டாலின் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மனு அளிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.