பரபரப்புக்கு மத்தியில் ஸ்டாலினின் 6ஆம் கட்ட தேர்தல் பரப்புரை : எப்போது தெரியுமா ?

பரபரப்புக்கு மத்தியில் ஸ்டாலினின்  6ஆம் கட்ட தேர்தல் பரப்புரை : எப்போது தெரியுமா ?

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 6ஆம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை வரும் 8 ஆம் தேதி தொடங்குகிறார்.

பரபரப்புக்கு மத்தியில் ஸ்டாலினின்  6ஆம் கட்ட தேர்தல் பரப்புரை : எப்போது தெரியுமா ?

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டதிலிருந்து அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். திமுகவைப் பொறுத்தவரையில் வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்களுடன் நேர்காணல் நடைபெற்று வருகிறது . இந்த நேர்காணல் கடந்த 2ஆம் தேதி தொடங்கிய நிலையில் 6ஆம் தேதி முடிவடைகிறது. அதேபோல் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு நடந்துவருகிறது. இதுவரை முஸ்லிம் லீக் ,மனிதநேய மக்கள் கட்சி இரண்டுடன் பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவு பெற்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இருப்பினும் , விசிக , மதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

பரபரப்புக்கு மத்தியில் ஸ்டாலினின்  6ஆம் கட்ட தேர்தல் பரப்புரை : எப்போது தெரியுமா ?

அத்துடன் கூட்டணி கட்சிகளான மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் தனிச்சின்னத்தில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது . இதுகுறித்தும் திமுக தலைமை ஆலோசித்து வருகிறது.இந்நிலையில் பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் மு.க.ஸ்டாலின் 6ஆம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை இம்மாதம் 8 ஆம் தேதி தொடங்குகிறார். அதன்படி 8 ஆம் தேதி சேலம், நாமக்கல், கரூர், 9 ஆம் தேதி திண்டுக்கல் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் 2 நாள் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.