விவசாயிகளின் வயிற்றில் வெந்நீர் ஊற்றுவதா? ஸ்டாலின் கண்டனம்!!

 

விவசாயிகளின் வயிற்றில் வெந்நீர் ஊற்றுவதா? ஸ்டாலின் கண்டனம்!!

விவசாயிகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் விதமாக உரவிலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளின் வயிற்றில் வெந்நீர் ஊற்றுவதா? ஸ்டாலின் கண்டனம்!!

உரவிலையை 58% மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதன் மூலம் 50 கிலோ டிஏபி உர மூட்டையின் விலை ரூ.1200 லிருந்து ரூ.1900 ஆக அதிகரித்துள்ளது. இது விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், விவசாயிகளின் எதிர்காலத்தில் வெந்நீர் ஊற்றும் விதமாக உரவிலை அதிகரிப்பு.தமிழகத்தில் சிறப்பாகச் செயல்பட்டு வந்த அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் உட்பட 7 தீர்ப்பாயங்கள் கலைப்பு.பாஜக அரசின் இத்தகைய செயல்பாடுகளை விவசாயிகளும், தமிழக மக்களும் மன்னிக்கமாட்டார்கள்! என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மனிதாபிமானமற்ற மத்திய பாஜக அரசு உர விலையை அதிகரித்திருக்கிறது. 58 சதவீத விலை உயர்வின் மூலம் 50 கிலோ டிஏபி உரம் மூட்டையின் விலை 1200 லிருந்து 1,900 ரூபாய் ஆக உயர்ந்திருக்கிறது. என்பிகே உரங்களின் விலையும் 50 சதவீதம் வரை உயர்ந்து நாடே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது.

சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தை குறைத்து விட்டு பிறகு திரும்பப் பெற்றது இந்த அரசு உர விலையை உயர்த்தி விட்டு, இப்போது அமல்படுத்த மாட்டோம் என்று கண்ணாமூச்சி விளையாட்டு நடக்கிறது. மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலிமாறன் அவர்களின் முயற்சியால் அறிவுசார், சொத்துரிமை, மேல்முறையீட்டு தீர்ப்பாயம் சென்னையில் துவக்கப்பட்டது.

காப்புரிமை, பதிப்புரிமை, புவிசார் குறியீடு தொடர்பான அவற்றில் மிக முக்கிய பங்காற்றியது தமிழ்நாட்டின் மீது உள்ள எரிச்சலில் இந்த தீர்ப்பாய் அத்துடன் சேர்த்து இன்னமும் 7 தீர்ப்பாயங்கள் கிடைத்துள்ளது, மத்திய பாஜக அரசு, இது தமிழ்நாட்டு தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட அநீதி. துரோகம் செய்துள்ள பாஜக அரசை விவசாயிகளும் தமிழக மக்களும் என்றைக்கும் மன்னிக்க மாட்டார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.