“உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட நிர்பந்திக்கவில்லை” – மு.க. ஸ்டாலின்

 

“உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட நிர்பந்திக்கவில்லை” – மு.க. ஸ்டாலின்

கூட்டணி கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட நிர்பந்திக்கவில்லை என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட நிர்பந்திக்கவில்லை” – மு.க. ஸ்டாலின்

இந்நிலையில் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், “கூட்டணி கட்சிகளை திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட நிர்பந்திக்கவில்லை. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட நிர்ப்பந்திப்பதாக கூறுவது கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுத்த செய்யப்படும் சதி. மக்கள் மனதில் இடம் பெற்ற ஒரு சின்னத்தில் போட்டியிட கூட்டணி கட்சிகள் விரும்பினால் அதை வழங்குவது கடமை.அண்ணா தலைமையில் நடந்த தேர்தலின் போது கூட்டணி கட்சிகள், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டன” என்றார்.

“உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட நிர்பந்திக்கவில்லை” – மு.க. ஸ்டாலின்

முன்னதாக வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுகவின் கூட்டணி கட்சிகாளான விடுதலை சிறுத்தைகள் கட்சி தனிச்சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்று அறிவித்தது. அதே போல் வைகோவின் மதிமுகவும் தனிச்சின்னத்தில் போட்டியிடுவதாக கூறியது. சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் மத்தியில் மிகவும் பரிட்சயமான உதயசூரியன் சின்னத்தில் கூட்டணி கட்சிகள் நின்றால் எளிதில் வெற்றி பெறலாம் என்ற கருத்து பரவலாக இருக்கும் நிலையில், கூட்டணி கட்சிகளை திமுக தலைமை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வலியுறுத்தி வருவதாக சொல்லப்பட்டது. இந்த சூழலில் அக்கட்சி தலைவர் ஸ்டாலின் இதற்கு மறுப்பு தெரிவித்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.