“உள்நோக்கத்துடன் தவறான அர்த்தத்திலும் பேசவில்லை” ஆ.ராசா

 

“உள்நோக்கத்துடன் தவறான அர்த்தத்திலும் பேசவில்லை”  ஆ.ராசா

முதலமைச்சர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு ஆ.ராசா விளக்கமளித்துள்ளார்.

“உள்நோக்கத்துடன் தவறான அர்த்தத்திலும் பேசவில்லை”  ஆ.ராசா

திமுக எம்.பி. ஆ.ராசா முதல்வர் குறித்தும், முதல்வரின் பிறப்பு குறித்தும் அவதூறாக பேசினார். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விவகாரத்திற்கு ஸ்டாலின், கனிமொழி கண்டனம் தெரிவித்தனர். அத்துடன் இந்த விவகாரம் தொடர்பாக திமுக எம்பி ஆர் ராசா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் சேலம் எடப்பாடியில் ராசாவின் கொடும்பாவி எரிக்கப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டது. ஆ.ராசாவின் பேச்சை சுட்டிக்காட்டி முதல்வர் பழனிசாமி பரப்புரையின் போது கண்ணீர் வடித்தார். இதை தொடர்ந்து உதகையில் செய்தியாளர்களை சந்தித்த ஆ.ராசா, “எனது பேச்சு, தனி மனித விமர்சனம் அல்ல; பொதுவாழ்வில் உள்ள 2 ஆளுமைகளின் மதிப்பீடு தான். முதலமைச்சர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கவில்லை.என்னால் முதல்வர் கண்கலங்கினார் என்பதை கேட்டு மனம் வேதனை அடைந்தேன்.எனது பேச்சால் முதல்வர் உள்ளபடியே காயப்பட்டு இருந்தால் மனம் திறந்து மன்னிப்புக் கோருகிறேன்” என்றார்.ஆ.ராசா பேச்சு தேர்தல் ஆணையம் வரை செல்ல இன்று மாலை 6 மணிக்குள் விளக்கம் அளிக்க ஆ.ராசாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. விளக்கம் அளிக்க தவறினால் நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்தது.

“உள்நோக்கத்துடன் தவறான அர்த்தத்திலும் பேசவில்லை”  ஆ.ராசா

இந்நிலையில் இதுகுறித்து கூறியுள்ள ஆ.ராசா, பெண்களின் கண்ணியத்திற்கு குறைவாகவும் தேர்தல் நடத்தை விதிகளை மீறியும் நான் பேசவில்லை. முதல்வர் பற்றி நான் பேசியதை அதிமுக பாஜக வினர் திரித்து பரப்புகின்றனர். முதல்வரை விமர்சித்த விவகாரத்தில் திட்டமிட்டு என் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் பற்றி அவதூறாக பேசிய புகார் குறித்து ஆ.ராசா விளக்கம் அனுப்பியுள்ளார். ஆ.ராசா தன்னுடைய விளக்கத்தை தேர்தல் ஆணையத்திற்கு பேக்ஸ் மூலம் அனுப்பினார்.அரசியல் தொடர்பான ஒப்பீடுகளை மட்டுமே பேசியதாகவும் வேறு எந்த உள்நோக்கத்துடன் தவறான அர்த்தத்திலும் பேசவில்லை என்றும் கூறியுள்ளார்.