எதிர்த்து போட்டியிட்டவர்களை துவம்சம் செய்த திமுக வாரிசுகள்… பெரு வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி!

எதிர்த்து போட்டியிட்டவர்களை துவம்சம் செய்த திமுக வாரிசுகள்… பெரு வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி!

கட்சிகள் செய்யும் அரசியலே வேற லெவலில் இருக்கும். ஆனால் அந்தக் கட்சிகளுக்குள் நடக்கும் உள்ளடி வேலைகளும் உள் அரசியலும் கற்பனைக்கும் எட்டாத தூரத்தில் இருக்கும். அதில் முக்கியமானது வாரிசு அரசியல். கட்சிகளிலுள்ள பெரிய தலைக்கட்டுகள் ரிட்டையர்டு ஆகும் வரை காத்துக் கொண்டிருப்பதில்லை. தாங்கள் லைம்லைட்டில் இருக்கும்போதே வாரிசுகளைக் களமிறக்கி விடுவார்கள்.

எதிர்த்து போட்டியிட்டவர்களை துவம்சம் செய்த திமுக வாரிசுகள்… பெரு வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி!

அவ்வாறாக எந்தெந்த வாரிசுகள் களமிறக்கப்பட்டார்கள். எங்கு போட்டியிட்டார்கள். எத்தனை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்கள் ஆகியவற்றைப் பார்க்கலாம்.

ஐபி செந்தில்குமார்

திண்டுக்கல்லில் திமுகவின் முகமாக அறியப்படுபவர் ஐ.பெரியசாமி. ஆத்தூர் தொகுதியில் போட்டியிட்ட அவர் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இவரது மகன் ஐ.பி. செந்தில்குமார் இரண்டாம் முறையாக பழனியில் களமிறக்கப்பட்டார். கடந்த முறையே வெற்றி கண்ட அவர், இம்முறையும் வென்றிருக்கிறார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ரவி மனோகரனை 30 ஆயிரத்து 56 வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தியிருக்கிறார்.

எதிர்த்து போட்டியிட்டவர்களை துவம்சம் செய்த திமுக வாரிசுகள்… பெரு வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி!

ஜெ.கருணாநிதி

மறைந்த ஜெ.அன்பழகன் சகோதரர் குட்டி என்ற கருணாநிதி. அனைவரும் அன்பழகன் மகன் ராஜாவுக்கு திநகர் தொகுதி வழங்கப்படும் என்று நினைத்திருந்தனர். ஆனால் எதிர்பாரா ட்விஸ்டாக அவரது சகோதரருக்கு திநகர் கொடுக்கப்பட்டது. இவரை எதிர்த்து அதிமுக சிட்டிங் எம்எல்ஏ சத்யா போட்டியிட்டார். இருவருக்கும் கடும் போட்டி நிலவியதையடுத்து வெறும் 137 வாக்குகளில் கருணாநிதி வென்றார். தமிழகத்திலேயே மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றவர் ஜெ.கருணாநிதி.

எதிர்த்து போட்டியிட்டவர்களை துவம்சம் செய்த திமுக வாரிசுகள்… பெரு வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி!

எழிலன்

கருணாநிதி ஆட்சிக் காலத்தில் திட்டக்குழு உறுப்பினராக இருந்தவர் நாகநாதன். அவரது மகன் மருத்துவர் எழிலன். கருணாநிதிக்கு தனி மருத்துவராக இருந்த எழிலன் ஸ்டாலினுடன் தனது பயணத்தைத் தொடர்ந்துவருகிறார். இவருக்கு ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்புவை எதிர்த்துப் போட்டியிட்டார். ஆரம்பத்திலிருந்தே முன்னிலையில் இருந்த எழிலன் 32 ஆயிரத்து 462 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

எதிர்த்து போட்டியிட்டவர்களை துவம்சம் செய்த திமுக வாரிசுகள்… பெரு வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி!

வெற்றியழகன்

43 வருடங்கள் திமுக பொதுச் செயலாளராக இருந்த க. அன்பழகன் கடந்த ஆண்டு மறைந்தார். அவரைச் சிறப்பிக்கும் வண்ணம் அவருக்கு பேரன் வெற்றியழகனுக்கு திமுக வர்த்தகர் அணி இணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடவும் வாய்ப்பளிக்கப்பட்டது. அவரை எதிர்த்து அதிமுக வேட்பாளர் ஜேசிடி பிரபாகர் போட்டியிட்டார். முடிவில் வெற்றியழகன் 37 ஆயிரத்து 237 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

எதிர்த்து போட்டியிட்டவர்களை துவம்சம் செய்த திமுக வாரிசுகள்… பெரு வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி!

டிஆர்பி ராஜா

டிஆர் பாலுவின் மகனான டிஆர்பி ராஜாவுக்கு கடந்த முறையே மன்னார்குடியில் வாய்ப்பளிக்கப்பட்டது. தற்போது அவர் சிட்டிங் எம்எல்ஏவாக இருக்கிறார். இம்முறையும் அவருக்கு அதே தொகுதியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. எதிர்த்து போட்டியிட்ட சிவா ராஜாமாணிக்கத்தை 37 ஆயிரத்து 393 வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தியிருக்கிறார்.

எதிர்த்து போட்டியிட்டவர்களை துவம்சம் செய்த திமுக வாரிசுகள்… பெரு வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி!

அன்பில் மகேஷ்

அன்பில் தர்மலிங்கம்-கருணாநிதி, அன்பில் பொய்யாழி-ஸ்டாலின், அன்பில் மகேஷ்-உதயநிதி என மூன்று தலைமுறைகளாக நட்பு பாரட்டப்பட்டுவருகிறது. கூடவே கட்சியில் பதவிகளாலும் அலங்கரிக்கப்படுகின்றனர். அன்பில் மகேஷ் கடந்த முறை திருவெறும்பூரில் எம்எல்ஏ தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இம்முறையும் போட்டியிட்டு 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி கண்டுள்ளார்.

திருச்சி: `குறைந்தது 200 தொகுதிகள்; சட்டப்பேரவை தேர்தலில் உதயநிதி?!' - அன்பில்  மகேஷ் | Anbil magesh talks about udhaynithi and dmk in upcoming election

உதயநிதி

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்டாக உதயநிதி ஸ்டாலின் இந்த லிஸ்டில் இணைகிறார். உதயநிதிக்கு வாய்ப்பு மறுக்கப்படும் என்று கூறிவந்த நிலையில் அவருக்கு சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட ஸ்டாலின் வாய்ப்பு கொடுத்தார். சேப்பாக்கம் தொகுதிக்கு உதயநிதியைத் தவிர்த்து யாரும் விருப்ப மனு கொடுக்கவில்லை. தமிழகத்தில் பெரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றவர்களில் உதயநிதியும் ஒருவர். தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் கஸ்ஸாலியை சுமார் 70 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடையச் செய்துள்ளார்.