திமுக பொதுக்குழு இன்று கூடுகிறது!

 

திமுக பொதுக்குழு இன்று கூடுகிறது!

திமுக பொதுக்குழு கூட்டம் கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடக்கிறது.

திமுக பொதுக்குழு இன்று கூடுகிறது!

சட்ட பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நடக்கிறது. காணொளி மூலம் நடக்கும் இக்கூட்டத்தில் 67 இடங்களில் இருந்து திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர். அண்ணா அறிவாலயத்தில் துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்ளிட்ட 70க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர்.

திமுக பொதுக்குழு இன்று கூடுகிறது!

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளார்கள். 3500 பேர் பங்கேற்கும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் செல்போன் கொண்டு செல்ல அனுமதி கிடையாது.

திமுக பொதுக்குழு இன்று கூடுகிறது!

பொதுக்குழு கூட்டத்தில் திமுகவின் சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக துணைப் பொதுச் செயலாளர் களின் எண்ணிக்கையை மூன்றிலிருந்து 5 ஆக உயர்த்த சட்டத்திருத்தம் என கூறப்படுகிறது. அதன்படி ஆ.ராசா, பொன்முடி ஆகியோர் தேர்வு செய்யப்படுவார்கள் என திமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.