மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடமிருந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி பிடுங்கிய இடங்கள்!

 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடமிருந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி பிடுங்கிய இடங்கள்!

சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடித்து வரும் நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை தொகுதி பங்கீட்டுடன் நிறைவு செய்துள்ளன. தேர்தல் தொடர்பான அரசியல் கட்சிகளின் அடுத்தடுத்த நகர்வுகள் கடும் எதிர்பார்புகளை ஏற்படுத்தி வருகின்றன. தமிழகத்தில் திமுக, அதிமுக கட்சிகள் தலைமையில் கூட்டணி அமைகிறது. அதிமுக-பாமக-பாஜக கட்சிகளும், திமுக-காங்கிரஸ் கட்சிகளும், மூன்றாவது அணியான மக்கள் நீதிமய்யம், சமத்துவ மக்கள் கட்சி மற்றும் ஐஜேக ஆகியவை கூட்டணி அமைத்துள்ளன. திமுக கூட்டணியும் அதிமுக கூட்டணியும் தொகுதி பங்கீட்டில் தீவிரம் காட்டி வருகின்றன. தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் உச்சத்தை எட்டியுள்ளன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடமிருந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி பிடுங்கிய இடங்கள்!

இந்நிலையில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி கடையநல்லூர், வாணியம்பாடி, சிதம்பரம் ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிடுவதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சிதம்பரம் தொகுதியை கேட்டு வம்பு செய்து வந்தது. இந்நிலையில் அந்த தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கே ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மேற்கண்ட மூன்று இடங்களிலும் திமுக கூட்டணியில் ஏணி சின்னத்தில் போட்டியிடவுள்ளது.