“பிரச்சனைகளைச் சொல்ல முடியவில்லை…டென்ஷனாகிறார் தலைவர்…” தலையை பிய்த்துக் கொள்ளும் திமுக நிர்வாகிகள்

 

“பிரச்சனைகளைச் சொல்ல முடியவில்லை…டென்ஷனாகிறார் தலைவர்…” தலையை பிய்த்துக் கொள்ளும் திமுக நிர்வாகிகள்

“தலைவர் ஸ்டாலினிடம் பிரச்சனைகளைச் சொல்ல முடியவில்லை. ஏதாவது சொன்னால் டென்ஷனாகி விடுகிறார்..தேர்தல் வருகிற சமயத்தில் எங்கள் பிரச்னைகளை வேறு யாருகிட்ட சொல்ல முடியும்?” எனக் கண் கலங்குகிறார்கள் திமுக நிர்வாகிகள்.
திமுகவைப் பொறுத்தவரை கட்டுக்கோப்பான கட்சி எனப் பெயர் எடுத்திருந்தாலும் கோஷ்டிப் பூசல் இல்லாத மாவட்டங்கள் இல்லை எனலாம். அந்த அளவிற்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் பல முக்கிய நிர்வாகிகள் “ஈகோ”வுடன் செயல் பட்டு வருவது வெட்ட வெளிச்சமான

“பிரச்சனைகளைச் சொல்ல முடியவில்லை…டென்ஷனாகிறார் தலைவர்…” தலையை பிய்த்துக் கொள்ளும் திமுக நிர்வாகிகள்

விஷயம்.”ஸ்டாலினைக் கண்டால் சமாதானம். காணா விட்டால் சண்டை” என்பதுதான் அவர்களது கொள்கையாக இருக்கிறது.
இப்போது தேர்தல் நெருங்குவதால் தொகுதிகளை எப்படிக் கையாள வேண்டும்,?அ.தி.மு.க.வை எதிர் கொள்வது எப்படி? கட்சிக்குள் இருக்கும் பிரச்சனையை எப்படி தீர்ப்பது? என்பது போன்ற பல்வேறு ஐடியாக்களை வைத்துக் கொண்டு போனால் “எனக்குத் தெரியும். நீ போ..உன் வேலையைப் பாரு” எனச் சீறுகிறாராம் ஸ்டாலின். சொல்லிச் சொல்லி மாய்கிறார்கள் திமுக நிர்வாகிகள்.
கடந்த ஆகஸ்டு மாதமே மேற்கண்ட பல பிரச்சனைகள் தாண்டவமாடத் தொடங்கி விட்டன. தென்சென்னை மாவட்ட செயலாளர் நிர்வாகிகள் கூட்டம் காணொளி காட்சி மூலமாக நடந்தது. இதில் கே.கே.நகர் நிர்வாகியான தனசேகரன் பேசும் போது, “நிறைய நிர்வாகிகள் உங்களோட பேச நினைக்கிறார்கள். ஆனா, வாய்ப்பு கொடுக்க மாட்டேங்கிறாங்க” எனப்

“பிரச்சனைகளைச் சொல்ல முடியவில்லை…டென்ஷனாகிறார் தலைவர்…” தலையை பிய்த்துக் கொள்ளும் திமுக நிர்வாகிகள்

பேசியிருக்கிறார். உடனே ஸ்டாலின், “அப்படி எதுவும் இல்லை. எல்லோருக்கும் வாய்ப்பு தரப்படுகிறது. எப்படி வாய்ப்புத் தரலைன்னு சொல்வீங்க” என்று பதில் சொல்லியிருக்கிறார். அத்துடன் அவர் தனது பேச்சை முடிக்கவில்லை. “தனசேகர், உங்களைப் பத்தி நிறைய புகார் வருது. போனா போகிறதுன்னு விட்டு வெச்சிருக்கேன். உங்க மேல வர்ற புகாரை சொன்னா தாங்கமாட்டீங்க. உங்க ஏரியாவுல கட்சி அலுவலகத்தையே இழுத்துப் பூட்டி வெச்சுருக்கீங்க. பாத்து நடந்துக்குங்க!” என டென்ஷனாகப் பேசியிருக்கிறார் ஸ்டாலின்.
கடந்த 21-ம் தேதி “கொங்கு மண்டல தி.மு.க நிர்வாகிகள் கூட்டம் அறிவாலயத்தில் நடந்தது. கூட்டத்தில், பல நிர்வாகிகள் பல்வேறு கருத்துக்களைச் சொல்லியிருக்கிறார்கள்.ஒருவர் “உறுப்பினர் சேர்க்கைக்கான கார்டு அடிப்பதற்கு தலா ரூ 25 செலவாகிறது. இந்தச் செலவை எப்படி சமாளிப்பது?” எனக் கேட்டிருக்கிறார். இன்னொருவர் கூட்டம் நடத்தி எங்களிடம் கருத்து கேட்கிறீர்கள். அதற்குப் பிறகு எந்த நடவடிக்கையும் இல்லை எனக் கேள்வி எழுப்பி இருக்கிறார்.மேலும் ஒருவர் ‘வரும் தேர்தலில் அ.தி.மு.கவினர் ஓட்டுக்கு ரூ 2,ஆயிரம் தருவதற்கு தயாராக இருக்கிறார்கள். நாம் எப்படி எதிர் கொள்ளப் போகிறோம் என்று கேட்டிருக்கிறார்.
இதையெல்லாம் கேட்ட ஸ்டாலின், “ஓட்டுக்குப் பணம் கொடுத்தாலும் நமக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. பிரச்னைகளை சரி செய்துவிடலாம்’ என்று சமாதானம் செய்த கையோடு தலைமை நிர்வாகிகளை அழைத்து “இனி இது போன்ற சாதாரணப் பொறுப்பிலிருப்பவர்களைப் பேசவைக்க வேண்டாம்” என்று சொன்னாராம். இது பேசியவர்களின் காதுகளுக்குச் செல்ல “நல்ல வேளை திட்டாமல் விட்டாரே என்று சந்தோசப்பட்டுக் கொண்டார்களாம்”.

“பிரச்சனைகளைச் சொல்ல முடியவில்லை…டென்ஷனாகிறார் தலைவர்…” தலையை பிய்த்துக் கொள்ளும் திமுக நிர்வாகிகள்


இதனிடயே தி.மு.க வர்த்தக அணி மாநில துணைத் தலைவரும், தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவருமான அய்யாதுரை பாண்டியனுக்கும், திருநெல்வேலி மேற்கு மாவட்டச் செயலாளர் சிவபத்மநாபனுக்கும் அடிக்கடி “லடாய் ஏற்பட, விஷயம் ஸ்டாலின் காதுகளுக்குச் சென்றது. கடந்த மாதம் சென்னையில் ஸ்டாலின் முன்னிலையில் இருவருக்குமான பஞ்சாயத்து நடந்தது. இதில் சிவபதம்நாபனுக்கு ஆதரவாக ஸ்டாலின் பேச.. ஒரு கட்டத்தில் எழுந்து போய் விட்டாராம் அய்யாத்துரைப்பண்டியன்.

“பிரச்சனைகளைச் சொல்ல முடியவில்லை…டென்ஷனாகிறார் தலைவர்…” தலையை பிய்த்துக் கொள்ளும் திமுக நிர்வாகிகள்


இந்த நிலையில் நேற்று முன் தினம் 23-ம் தேதி தென்மண்டல நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் அறிவாலயத்தில் நடைபெற்றது.இதில்கலந்து கொண்ட அய்யாதுரை பாண்டியனின் ஆதரவாளரும், செங்கோட்டை ஒன்றியச் செயலாளருமான ரவிசங்கர் எழுந்து, “திருநெல்வேலி மேற்கு மாவட்டத்துக்குள் 4 தொகுதிகள் வருகிறது. தலா 2 தொகுதிகள் வீதம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்தால், கட்சியின் செயல்பாடு சிறப்பானதாக அமையும்” என்று சொல்லியிருக்கிறார்.

“பிரச்சனைகளைச் சொல்ல முடியவில்லை…டென்ஷனாகிறார் தலைவர்…” தலையை பிய்த்துக் கொள்ளும் திமுக நிர்வாகிகள்


இதற்கு பதிலளித்த ஸ்டாலின், “அப்படின்னா இப்ப சிறப்பா இல்லைங்கிறீங்களா எதை எப்ப, எப்படிப் பிரிக்கனும்னு எங்களுக்குத் தெரியும். உங்களுக்கு என்ன பிரச்னை அதச் சொல்லுங்க ?” என்று சொல்லவும் பேசாமல் அமர்ந்து விட்டாராம் ரவிசங்கர். மேற்படி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பலரும் “ஏதாவது குறைகளைப் பேச ஆரம்பிக்கும் முன்னரே, ‘சரி வேற ஏதாவது பேசுங்க என்று சொல்லி வாயைப் பொத்தி விடுகிறார்கள்.முதலில் கட்சிப் பிரச்னையை அவர் சரி செய்தால்தான் தேர்தலில் வெற்றி கிடைக்கும். அதுவல்லாமல் நடக்கவிருக்கும் உள்குத்துகளால் கட்சி நிலைமை என்னவாகும் எனத் தெரியவில்லை?” எனப் புலம்புகின்றனர் திமுகவினர்..