திருகோவிலூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் பொன்முடி வெற்றி!

 

திருகோவிலூர் தொகுதியில்  முன்னாள் அமைச்சர் பொன்முடி வெற்றி!

கள்ளக்குறிச்சி

திருகோவிலூர் சட்டமன்ற தொகுதியில் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி வெற்றி பெற்றுள்ளார்

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருகோவிலூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பொன்முடியும், அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் கலிவரதன் ஆகியோர் போட்டியிட்டனர்.

திருகோவிலூர் தொகுதியில்  முன்னாள் அமைச்சர் பொன்முடி வெற்றி!

இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பொனமுடி முன்னிலை வகித்து வந்தார். இந்த நிலையில், அனைத்துச் சுற்றுக்களும் நிறைவடைந்த நிலையில், அவர் 60 ஆயிரத்து 93 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் திமுக கூட்டணி 155 இடங்களிலும், அதிமுக கூட்டணி 78 இடங்களிலும் மக்கள் நீதி மய்யம் கட்சி 1 இடத்திலும் முன்னிலை வகித்து வருகின்றனர்.