Home தமிழகம் ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்க வழக்கு: ஜூலை 8 ஆம் தேதி விசாரணை

ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்க வழக்கு: ஜூலை 8 ஆம் தேதி விசாரணை

ஜெயலலிதா மறைவுக்கு பின் தமிழக சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி அரசுக்கு எதிராக ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். இவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று தி.மு.க. தரப்பில் சபாநாயகரிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து திமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம் 11 எம்எல்ஏ-க்களை தகுதிநீக்கம் செய்ய முடியாது என்று கூறியது. இதனை எதிர்த்து திமுக சார்பில் கொறடா சக்கரபாணி, தங்க தமிழ்செல்வன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், இந்த வழக்கில் 3 ஆண்டுகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன் என்று சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும் திமுக மனு மீது சபாநாயகர் எடுத்த நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்க உத்தரவிட்டனர். இந்த வழக்கை கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி விசாரித்த போது, சபாநாயகர் தனபால் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று உறுதியளிக்கப்பட்டது. இதனால் அதை ஏற்றுக்கொண்டு வழக்கை முடித்து வைப்பதாக அறிவித்தார். இந்த நிலையில் கடந்த ஜூன் 9 ஆம் தேதி திமுக சார்பில் புதிதாக இடைக்கால மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அரசுக்கு எதிராக எம்.எல்.ஏக்கள் மீது உச்சநீதிமன்றமே முடிவெடுக்க வேண்டும் என்றும் சபாநாயகர் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து சபாநாயகர் முதல்வரிடம் கேள்விக்கேட்க, இது உட்கட்சி பிரச்னை என முதலமைச்சரும் கடிதம் வாயிலாக பதிலளித்தார்.இந்நிலையில் ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி தி.மு.க. தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் ஜூலை 8-ஆம் தேதி மீண்டும் விசாரணைவரவுள்ளது.

மாவட்ட செய்திகள்

Most Popular

இனி பெண்கள் ரயிலில் பாதுகாப்பாக பயணம் செய்யலாம்: ‘எனது தோழி’ திட்டம் தொடக்கம்!

ரயிலில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 'எனது தோழி' என்ற திட்டத்தை இந்திய ரயில்வே தொடங்கியிருக்கிறது. ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதி...

பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகத்தில் கணக்கில்வராத ரூ.55,920 பறிமுதல்

நாமக்கல் பள்ளிப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு சோதனையில் கணக்கில் வராத 56 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

புதிய மாவட்ட ஆட்சியராக கார்த்திகா பொறுப்பேற்பு

தர்மபுரி தர்மபுரி மாவட்டத்தின் புதிய ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்ட கார்த்திகா இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த 3 ஆண்டுகளாக மாவட்ட தர்மபுரி ஆட்சியராக இருந்து...

தீபம் ஏற்றும் திரிகளில் உள்ள ரகசியம்!

இருளை நீக்கி ஒளியை தரும் தீபத்திற்கு பயன்படுத்தபடும் திரிகள் புதிதாகவும், கெட்டியானதாகவும் இருக்க வேண்டும். விளக்கிற்கு பயன்படுத்தும் திரிகளாலும் பயன்கள் மாறுபடுகின்றன.
Do NOT follow this link or you will be banned from the site!