“கட்சி கட்டுக்கோப்பாக இருக்கும்” துரைமுருகன் உறுதி!

 

“கட்சி கட்டுக்கோப்பாக இருக்கும்” துரைமுருகன் உறுதி!

மு.க.ஸ்டாலினின் அமைச்சரவையில் அனுபவமிக்கவர்களுக்கும், இளைஞர்களுக்கும் சமவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். அவரை தொடர்ந்து துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி உள்ளிட்ட 33 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். முதல்வர் பொறுப்புக்கு வந்த உடனேயே மு.க. ஸ்டாலின் கொரோனா நிவாரண உதவியாக ரூபாய் 4,000 இரண்டு தவணைகளாக வழங்கப்படும் என்று அறிவித்தார். அத்துடன் ஆவின் பால் விலை குறைப்பு, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்காக கட்டணத்தை அரசே ஏற்கும் உள்ளிட்ட ஐந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.இந்த நிகழ்வுகளின் போது திமுக மூத்த தலைவரும் பொதுச் செயலாளருமான துரைமுருகன் உடன் இருந்தார் . துரைமுருகன் நீர்ப்பாசனத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது கவனிக்கத்தக்கது.

“கட்சி கட்டுக்கோப்பாக இருக்கும்” துரைமுருகன் உறுதி!

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக பொதுச்செயலாளரும், நீர்பாசனத்துறை அமைச்சருமான துரைமுருகன், ” அமைச்சரவையில் அனுபவம் மிக்கவர்கள், இளைஞர்களுக்கு சமமாக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை முதல் நாளிலிருந்து நிறைவேற்ற ஆரம்பித்து விட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின். திமுகவின் வளர்ச்சி நன்றாக இருக்கும் ; கட்சி கட்டுக்கோப்பாக இருக்கும் ” என்றார்.