தேர்தலுக்கு முன்பே ‘அந்த’ கூட்டணி உடையுதா இல்லையானு பாருங்க – அமைச்சர் பகீர்!

 

தேர்தலுக்கு முன்பே ‘அந்த’ கூட்டணி உடையுதா இல்லையானு பாருங்க – அமைச்சர் பகீர்!

தமிழகத்தில் திமுகவுக்கும் காங்கிரஸுக்கும் உரசல் உள்ளதாக நீண்ட நாள்களாகவே ஒரு தகவல் உலா வருகிறது. புதுச்சேரியில் காங்கிரஸை கழற்றிவிடும் நோக்கில் ஜெகத்ரட்கனை வைத்து திமுக காய்களை நகர்த்திவருவதாகவும் ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. இச்சூழலில் புதுச்சேரி அரசு கவிழ திமுக எம்எல்ஏ ஒருவரும் காரணமாக அமைந்திருக்கிறார். அவர் நேற்றே ராஜினாமா செய்தும் திமுக தலைவர் ஸ்டாலின் எந்த ஒரு எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை.

ராஜினாமா செய்த அந்த எம்எல்ஏ கட்சித் தலைமையிடம் கூறிவிட்டுத் தான் செய்ததாகக் கூறியிருந்தார். நேற்று எந்த எதிர்வினையும் தெரிவிக்காமல் இன்று கடமைக்கு அவரைக் கட்சியை விட்டு தற்காலிகமாக நீக்கியுள்ளது. இதன்மூலம் இரு கட்சிகளுக்குமான பிளவு பெரிதாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை பிப்ரவரி 24இல் நடைபெறும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.

தேர்தலுக்கு முன்பே ‘அந்த’ கூட்டணி உடையுதா இல்லையானு பாருங்க – அமைச்சர் பகீர்!

இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் தமிழகத்தில் தேர்தல் அறிவிப்புக்கு முன், திமுக – காங்கிரஸ் கூட்டணி உடைய வாய்ப்புள்ளது என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பேசிய அவர், “அதிமுக தொகுதிப் பங்கீடு தொடர்பாகக் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே திமுக-காங்கிரஸ் கூட்டணி உடைந்துவிடும். இரு கட்சிகளிடையே மனக்கசப்பு இருப்பதால் தான் புதுச்சேரியில் ஆட்சி கவிழ்ந்துவிட்டது” என்றார்.