“அதிமுக – பாஜகவை போல திமுக -காங்கிரஸ் கூட்டணி அடிமை கூட்டணி அல்ல” : கே.எஸ்.அழகிரி

 

“அதிமுக – பாஜகவை போல திமுக -காங்கிரஸ் கூட்டணி அடிமை கூட்டணி அல்ல” : கே.எஸ்.அழகிரி

எழுவர் விடுதலை குறித்து திமுக – காங்கிரஸ் கூட்டணியின் மாற்றுக்கருத்துக்கள் குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி விளக்கமளித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்ளை சந்தித்த கே.எஸ். அழகிரி, “அதிமுக – பாஜகவை போல திமுக -காங்கிரஸ் கூட்டணி அடிமை கூட்டணி அல்ல; சுதந்திர கூட்டணி. திமுக காங்கிரஸ் கூட்டணி ஜனநாயக ரீதியான கூட்டணி என்பதால் சுதந்திரமான கருத்துக்களை சொல்கிறோம். 7 பேர் விடுதலை விவகாரத்தில் திமுக – காங்கிரஸ் இடையே மாற்றுக்கருத்து இருப்பது பற்றி இவ்வாறு அவர் விளக்கமளித்துள்ளார்.

“அதிமுக – பாஜகவை போல திமுக -காங்கிரஸ் கூட்டணி அடிமை கூட்டணி அல்ல” : கே.எஸ்.அழகிரி

தொடர்ந்து பேசியுள்ள அவர், “பாஜகவினர் வேல் யாத்திரை அல்ல வாள் யாத்திரை நடத்தினாலும் தமிழகத்தில் இடம் பெற முடியாது . முருகனை விட்டுவிட்டு அவர் கையில் பிடித்திருக்கும் வேலை பாஜகவினர் எடுத்துக் கொண்டடுள்ளனர் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

“அதிமுக – பாஜகவை போல திமுக -காங்கிரஸ் கூட்டணி அடிமை கூட்டணி அல்ல” : கே.எஸ்.அழகிரி

முன்னதாக பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய தமிழக காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது. அதில், “முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையாளிகளை விடுதலை செய்வதை நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும். அவர்களை விடுவித்தால் சிறைச் சாலைகளில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் அனைத்து தமிழ் கொலை குற்றவாளிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழும். கொலை குற்றவாளிகளை விடுவிக்க வேண்டும் என்று ஒரு இயக்கம் ஆரம்பித்தால் தமிழகத்தில் காவல் நிலையங்கள் வேண்டாம், நீதிமன்றங்கள் வேண்டாம், சட்டம் ஒழுங்கைப் பற்றி பேச வேண்டாம் என்பது பொருளாகும். எனவே, முன்னாள் பிரதமரை படுகொலை செய்து, இந்தியாவிற்கு கேடு விளைவித்த குற்றவாளிகளுக்கு பரிந்து பேசுவது தமிழர் பண்பாடு ஆகாது” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.