காங்கிரஸை வெளியேற்ற நினைக்கிறதா திமுக?

 

காங்கிரஸை வெளியேற்ற நினைக்கிறதா திமுக?

காங்கிரஸ் கட்சி தனித்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளது குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார்

தமிழக தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் 2021 சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் ஆட்சியை பிடிக்க தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆகியவை கங்கணம் கட்டிக்கொண்டு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். அதிமுக சார்பில் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளரும், தற்போதைய முதல்வருமான எடப்பாடி பழனிசாமி நேரடியாக களத்தில் இறங்கியுள்ளார். அவர் அதிமுக அரசின் நலத்திட்டங்கள் மற்றும் திமுக ஆட்சியை ஆட்சியை விமர்சித்து தனது தேர்தல் பிரச்சாரத்தை நடத்தி வருகிறார்.

காங்கிரஸை வெளியேற்ற நினைக்கிறதா திமுக?

அதேபோல் திமுகவில் கனிமொழி, உதயநிதி ஸ்டாலின், தயாநிதி மாறன் உள்ளிட்ட பலரும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வரும் நிலையில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், மக்கள் கிராம சபை என்கின்ற பெயரில் மக்களை நேரடியாக சந்தித்து திமுக ஆட்சியில் மக்களுக்கு கொடுத்த நல திட்டங்கள் மற்றும் அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல்கள் குறித்து பேசிவருகிறார். இப்படியாக தமிழக தேர்தல் களம் பரபரப்பாக இயங்கி வரும் சூழலில் திமுக – அதிமுக கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்தும் ஆலோசித்து வருகிறது.

காங்கிரஸை வெளியேற்ற நினைக்கிறதா திமுக?

அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பது உறுதியாகியுள்ள நிலையில் பாமக மற்றும் தேமுதிக கூட்டணியில் இழுபறி நீடித்து வருகிறது. அதேபோல் திமுகவில் விடுதலை சிறுத்தைகள் மற்றும் மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கவுள்ள நிலையில் காங்கிரஸ் – திமுக கூட்டணியில் நீடிக்குமா? அல்லது மூன்றாம் அணியாக மாறுமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது. காரணம் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை காங்கிரஸ் தனித்து தொடங்கி உள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தில் மூன்று நாள் சுற்றுப்பயணமாக வருகை புரிந்துள்ளார். அந்த வகையில் நேற்று கோவையில் பிரசாரத்தை தொடங்கிய அவர் இன்று ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் தனது அரசியல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

காங்கிரஸை வெளியேற்ற நினைக்கிறதா திமுக?

அதேசமயம் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் கமல் ஹாசன் இணைய வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஒருவேளை கமல், காங்கிரஸுடன் இணையும் பட்சத்தில் திமுகவில் இருந்து காங்கிரஸ் வெளியேற வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

காங்கிரஸை வெளியேற்ற நினைக்கிறதா திமுக?

இந்நிலையில் வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனிடம், காங்கிரஸ் தனித்து பிரச்சாரம் மேற்கொள்கிறதே? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், இப்போதாவது அப்படி ஒரு முடிவு எடுத்தார்களே என்பதற்கு பாராட்டுகள் என்று தெரிவித்தார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் இந்த பேச்சு காங்கிரஸை தங்கள் கூட்டணியில் இருந்து திமுக வெளியேற்றி நினைக்கிறதா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. முன்னதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி, ராயபுரம் தொகுதியை காங்கிரஸிடம் கொடுத்ததால் அங்கு தோல்வி அடைந்தோம் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.