106ஐ கைப்பற்றி முன்னிலையில் திமுக… அதிமுகவுக்கு பின்னடைவு : தந்தி டிவி சர்வே இதோ!!

 

106ஐ கைப்பற்றி முன்னிலையில் திமுக… அதிமுகவுக்கு பின்னடைவு : தந்தி டிவி சர்வே இதோ!!

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கருத்துக்கணிப்பு நடத்தி வரும் நிலையில் தந்தி டிவி தேர்தல் சர்வே நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டு வருகிறது.

106ஐ கைப்பற்றி முன்னிலையில் திமுக… அதிமுகவுக்கு பின்னடைவு : தந்தி டிவி சர்வே இதோ!!

அந்த வகையில் வடக்கு மாவட்டங்களில் 50 தொகுதிகளுக்கான கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளது. 50 தொகுதிகளில் திமுக கூட்டணிக்கு 11 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 6 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் 33 தொகுதிகள் இழுபறியாக இருக்கும் என்றும் தந்தி டிவி சர்வே தெரிவித்துள்ளது.

இந்நிலையில் திமுக வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் என்ற பட்டியலில் உத்திரமேரூர், போளூர் ,செய்யாறு, வந்தவாசி ,குடியாத்தம் ,சங்கராபுரம், ரிஷிவந்தியம் ,மயிலம் ,மண்ணச்சநல்லூர், சிங்காநல்லூர், ஆர்கே நகர், ஆகிய தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. அதேபோல அதிமுக கூட்டணி வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் என்ற பட்டியலில் ஆரணி, கலசபாக்கம், அணைக்கட்டு, ஜோலார்பேட்டை, அரியலூர் ஆகிய தொகுதிகள் இடம் பெற்றுள்ளன ,அதேபோல் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக ஜெயங்கொண்டம் தொகுதியில் வெற்றி பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் அதிமுக – திமுக கூட்டணிக்கு இடையே கடும் போட்டி நிலவும் தொகுதிகளாக கடலூர் ,குன்னம் ,திருச்சி கிழக்கு, மணப்பாறை, ஸ்ரீரங்கம், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், ஆண்டிபட்டி ,பொள்ளாச்சி, மயிலாப்பூர், துறைமுகம், ராயபுரம் ஆகிய தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இதில் திருச்சி கிழக்கு, மணப்பாறை, குன்னம் ,வேடசந்தூர் ,பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் அதிமுக முன்னிலை வகிக்கிறது அதேசமயம் மயிலாப்பூர் துறைமுகம் ஆகிய தொகுதிகளில் திமுக முந்துகிறது.

அத்துடன் ஸ்ரீபெரும்புதூர் ,செங்கம், கீழ்வைத்தியனாங்குப்பம், ராணிப்பேட்டை, அரக்கோணம் ,வாணியம்பாடி ,தர்மபுரி, அரூர், பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி ,ஊத்தங்கரை ,மேட்டூர் ,வீரபாண்டி, கள்ளக்குறிச்சி ,உளுந்தூர்பேட்டை ,விழுப்புரம், திண்டிவனம் ,விக்கிரவாண்டி, புவனகிரி ஆகிய தொகுதிகளிலும் கடும் போட்டி நிலவுகிறது . இதில் செங்கம் ,வாணியம்பாடி ,பாப்பிரெட்டிப்பட்டி, கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, வானூர், விழுப்புரம் ,திண்டிவனம் ,புவனகிரி ஆகிய தொகுதிகளில் அதிமுக முன்னிலை வகிக்கிறது. அதேசமயம் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி ஊத்தங்கரையிலும், வீரபாண்டி ,தர்மபுரி, பென்னாகரம் ஆகிய தொகுதிகளில் திமுகவும் முன்னிலை வகிக்கிறது . அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக மேட்டூர் தொகுதியில் வெற்றி வாய்ப்பு பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் 200 தொகுதிகளுக்கான முடிவினை தந்தி டிவி இதுவரை வெளியிட்டுள்ளது. இதில் திமுக கூட்டணி 106 இடங்களிலும், அதிமுக கூட்டணி 37 இடங்களிலும் வெற்றிபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.