பெண்களுடன் இணைந்து.. குத்தாட்டம் ஆடிய திமுக வேட்பாளர்!

 

பெண்களுடன் இணைந்து.. குத்தாட்டம் ஆடிய திமுக வேட்பாளர்!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், அமமுக, நாம் தமிழர் ஆகிய அனைத்து கட்சிகளும் தேர்தலுக்காக அதிரடியாக களமிறங்கியுள்ளன. அக்கட்சிகளின் வேட்பாளர்கள் மக்கள் மத்தியில் தீவிரமாக வாக்கு சேகரித்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களுடன் அமர்ந்து டீ குடிப்பது, செல்ஃபி எடுத்துக் கொள்வது, தோசை சுடுவது, துணி துவைப்பது என வழக்கமான அரசியல் நாடகங்களையும் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

பெண்களுடன் இணைந்து.. குத்தாட்டம் ஆடிய திமுக வேட்பாளர்!

அண்மையில், ராமநாதபுரத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து கூட்டணி கட்சியினரான மதிமுகவினர் பாம்பன் கடலில் 6 மணி நேரம் மிதந்து வாக்கு சேகரித்த சம்பவமும் அதிமுக அமைச்சர்கள் சிலர் மக்கள் காலில் விழுந்து வாக்கு சேகரித்த சம்பங்களும் வைரலானது. இந்த நிலையில், கோவை மாவட்டம் சிங்காநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் கார்த்திக் பெண்களுடன் நடனம் ஆடி வாக்கு சேகரித்த வீடியோ வைரலாகிக் கொண்டிருக்கிறது.

நேதாஜி புரம், சக்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் அவருக்கு, பெண்கள் ஆரத்தி எடுத்தும் சால்வை அணிவித்தும் பலத்த வரவேற்பு கொடுத்தனர். அதன் பிறகு, பெண்களுடன் இணைந்து அவர் நடனம் ஆடினார்.