அனுமதியின்றி கொண்டுவந்த பயன்படுத்தாத வாக்கு எந்திரங்கள்… திமுகவினர் முற்றுகையால் பரபரப்பு…

 

அனுமதியின்றி கொண்டுவந்த பயன்படுத்தாத வாக்கு எந்திரங்கள்… திமுகவினர் முற்றுகையால் பரபரப்பு…

தூத்துக்குடி

தூத்துக்குடி வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு உரிய ஆவணமின்றி, பயன்படுத்தப் படாத வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டதால், அதிகாரிகளுடன், திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்திற்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்கு பதிவான, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், தூத்துக்குடி அரசு பொறியியல் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மைத்திற்கு நேற்றிரவு கொண்டுவரப்பட்டன. தொடர்ந்து, வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு, 3 கட்ட போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.

அனுமதியின்றி கொண்டுவந்த பயன்படுத்தாத வாக்கு எந்திரங்கள்… திமுகவினர் முற்றுகையால் பரபரப்பு…

இந்த நிலையில், இரவில் உரிய ஆவணங்கள் இன்றி கண்டெய்னர் லாரிகள் வாக்குப்பதிவு மையத்திற்கு வந்தன. இதனால் அங்கு திரண்டிருந்த திமுக உள்ளிட்ட அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள், இதுகுறித்து வாகன ஓட்டிகளிடம் விசாரித்தபோது உரிய பதில் அளிக்காததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அரசியல் கட்சியினர், வானங்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து வந்த ஆட்சியர் செந்தில் ராஜ், கண்டெய்னர்களில் கொண்டுவரப்பட்டவை வாக்கு எண்ணும் மையங்களில் பழுதானவை மற்றும் பழுதானவற்றுக்கு பதிலாக மாற்ற வைக்கப்பட்டிருந்த எந்திரங்கள் என கூறினார். மேலும், அவற்றை வாக்குப்பதிவு குடோனுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். இதனை அடுத்து, அரசியல் கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.