பாஜக – திமுக இடையே வெடித்த மோதல்!

 

பாஜக – திமுக இடையே வெடித்த மோதல்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலையில் இருந்து சுமுகமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. நேரம் ஆக ஆக அரசியல் கட்சியினர் தங்களது வேலைகளை காட்டத் தொடங்கினர். வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா, எதிர்கட்சியினருடன் மோதல், அதிகாரிகளுடன் வாக்குவாதம் என பல்வேறு பிரச்னைகளை கிளப்பி வாக்குச்சாவடிகளில் பதற்றத்தை ஏற்படுத்தினர். சில இடங்களில் வாக்குப்பதிவு நிறுத்த வேண்டிய அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது.

பாஜக – திமுக இடையே வெடித்த மோதல்!

பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறிந்து கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும் நிலையிலும், அரசியல் கட்சியினரின் குளறுபடியால் வாக்குப்பதிவில் பதற்றம் நீடிக்கிறது. இந்த நிலையில், அரவக்குறிச்சி தொகுதியில் திமுக, பாஜகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திட்டுள்ளது. அரவக்குறிச்சி தொகுதி பள்ளப்பட்டி வாக்குச்சாவடியில் பணியில் ஈடுபட்டிருக்கும் சுகாதாரத்துறையினர் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக பாஜகவினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

பாஜக – திமுக இடையே வெடித்த மோதல்!

இதனால் பாஜக – திமுக பிரமுகர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அவர்களை சமாதானப்படுத்தி வாக்குச்சாவடியில் பதற்றத்தை தணிக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அரவக்குறிச்சி தொகுதியில் தமிழக பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.