‘ஓபிஎஸ் மகன்’ காரின் மீது திமுகவினர் கல்வீசித் தாக்குதல்!

 

‘ஓபிஎஸ் மகன்’ காரின் மீது திமுகவினர் கல்வீசித் தாக்குதல்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. காலையில் இருந்து சுமுகமாக சென்று கொண்டிருந்த வாக்குப்பதிவு, மதியத்திற்கு மேல் பதற்றம் நிறைந்ததாக மாறியது. ஆங்காங்கே ஆளுங்கட்சியினரும் எதிர்கட்சியினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்வதால் பல வாக்குச்சாவடிகளில் பதற்றம் நிலவுகிறது.

‘ஓபிஎஸ் மகன்’ காரின் மீது திமுகவினர் கல்வீசித் தாக்குதல்!

ராணிப்பேட்டை சோளிங்கர் தொகுதி நெமிலி அரசுப்பள்ளி வாக்குச்சாவடி அருகே அமமுக – பாஜக தொண்டர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இந்த மோதலில் கார் கண்ணாடி சேதமடைந்துள்ளது. அதே போல, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் வாக்குப்பதிவை நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு பல வாக்குச்சாவடிகளில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

‘ஓபிஎஸ் மகன்’ காரின் மீது திமுகவினர் கல்வீசித் தாக்குதல்!

இந்த நிலையில், துணை முதல்வர் ஓபிஎஸ் மகனும் தேனி எம்.பியுமான ரவீந்திரநாத் காரின் மீது மர்ம நபர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் அவரது காரின் கண்ணாடி உடைந்துள்ளது. திமுகவினர் தான் கல்வீசித் தாக்குதல் நடத்தியதாக ரவீந்திரநாத் எம்.பி குற்றஞ்சாட்டியுள்ளார்.