புதுக்கோட்டை சிறுமி குடும்பத்திற்கு 5 லட்சம் நிவாரணம்- முதலமைச்சர்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை காணவில்லை என பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் அந்த சிறுமியை தேடிய போலீசார், நேற்று அறந்தாங்கியில் இருக்கும் ஒரு வறண்ட குளத்தில் சடலமாக கண்டெடுத்தனர். அந்த சிறுமியின் உடலில் பலத்த காயங்கள் இருந்த நிலையில், அந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரிய வந்தது. இவ்வாறு தமிழகத்தில் பல சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகி கொலை செய்யப்படும் சம்பவம் தொடருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் நிலையில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி சிறுமியின் உறவினர்கள் போரட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சிறுமியின் பெற்றோரிடம் அவரது உடல் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட ஏழு வயது சிறுமியின் குடும்பத்திற்கு திமுக சார்பில் 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. திருமயம் எம்.எல்.ஏ ரகுபதி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், சிறுமியின் குடும்பத்தினரிடம் ரூ.5 லட்சம் நிதியை வழங்கினர்.

Most Popular

`வேறு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு; ஏரியா தகராறு!’- கோவில்பட்டியை பதறவைத்த இளைஞரின் கொலை

வேறொரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பில் இருந்ததால் கணவனை மனைவி பிரிந்து சென்றார். தனியாக இருந்த கணவன் ஏரியா தகராறில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் கோவில்பட்டியில் நடந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பாரதிநகர் கருமாரியம்மன்...

காங்கிரசின் இந்துத்துவா ஆதரவு நிலைப்பாட்டை ராகுல், பிரியங்கா காந்தி பின்பற்றுகிறார்கள்.. பினராயி விஜயன்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிக்கான பூமி பூஜைக்கு காங்கிரசின் முக்கிய தலைவர்களான ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் வாழ்த்து தெரிவித்தது எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை என செய்தியாளர்களின் சந்திப்பின் போது கேரள...

ராமர் கோயில் பூமி பூஜை.. மக்களின் மத உணர்வுகளை வெளிப்படையாக சுரண்டுவது.. சீதாராம் யெச்சூரி ஆவேசம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி ராமர் கோயில் பூமி பூஜை விழாவை கடுமையாக தாக்கியுள்ளார். இது தொடர்பாக அவர் டிவிட்டரில் தொடர்ச்சியான டிவிட்டுகளில், இந்த பூமி பூஜை விழா...

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் தந்தைவழி உறவுகளால் நன்மைகள் வந்து சேரும்!

இன்றைய ராசிபலன்கள் 7.08. 2020 (வெள்ளிக்கிழமை) நல்ல நேரம் காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை ராகு காலம் 10.30 மணி முதல் 12 வரையில் எமகண்டம்...