உள் ஒதுக்கீடு மசோதா: ஆளுநர் மாளிகை முன் வரும் 24 ஆம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்

உள் ஒதுக்கீடு மசோதா: ஆளுநர் மாளிகை முன் வரும் 24 ஆம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்

அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவை நினைவாக்கும் விதமாக, இளங்கலை மருத்துவ படிப்புக்கு 7.5% உள்ஒதுக்கீடு அளிக்கும் சட்ட மசோதா அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதா தற்போது ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் பரிசீலனையில் இருக்கிறது. நடப்பாண்டு நீட் தேர்வு தேர்வு முடிவுகளும் வெளியாகிய நிலையில், உள்ஒதுக்கீட்டுக்கு ஆளுநர் இன்னும் ஒப்புதழ் வழங்கவில்லை.

உள் ஒதுக்கீடு மசோதா: ஆளுநர் மாளிகை முன் வரும் 24 ஆம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்

இந்நிலையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% முன்னுரிமை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்க மறுக்கும் ஆளுநரையும், அதற்கு அழுத்தம் தரத் தவறி, மாணவர்களுக்குத் துரோகம் செய்யும் அ.தி.மு.க. அரசையும் கண்டித்து 24-10-2020 அன்று காலை 10.00 மணியளவில் ஆளுநர் மாளிகை முன்பு தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வாயிலாக அறிவித்துள்ளார்.