கடையநல்லூரை முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒதுக்கிய திமுக!

 

கடையநல்லூரை முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒதுக்கிய திமுக!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் திமுக, கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை பிரித்து வழங்குவதில் மும்முரம் காட்டிக் கொண்டிருக்கிறது. திமுக கூட்டணிக் கட்சிகள் சில, ஒரே தொகுதிகளை கேட்பதாகவும், திமுக தனது வேட்பாளரை களமிறக்க திட்டமிட்டிருந்த தொகுதிகளை கேட்பதாகவும் நேற்று பரபரப்பு தகவல்கள் வெளியானது.

கடையநல்லூரை முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒதுக்கிய திமுக!

இரட்டை இலக்கத்தில் கூட்டணிக் கட்சிகள் எதிர்பார்த்த தொகுதிகளை கொடுக்காத திமுக, தற்போது அக்கட்சிகள் எதிர்பார்க்கும் சில தொகுதிகளையாவது கொடுக்குமா? அல்லது விடப்பிடியாக தனது வேட்பாளர்களையே களமிறக்குமா? என்ற கேள்வி வெகுவாக எழுந்துள்ளது. இந்த நிலையில், இன்று காலையில் இருந்து எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் வழங்குவது என கூட்டணிக் கட்சிகளுடனேயே திமுக தலைமை ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறது.

கடையநல்லூரை முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒதுக்கிய திமுக!

அந்த வகையில், அண்ணா அறிவாலயத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி திமுக குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அதன் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காதர் மொய்தீன், திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி கடையநல்லூரில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. மீதமுள்ள இரண்டு தொகுதிகள் என்னென்ன என்பது குறித்து இன்று மாலை முடிவாகும் என தெரிவித்தார்.

மேலும் ஆம்பூர், வாணியம்பாடி தொகுதிகளில் ஒன்றும் பாபநாசம், சிதம்பரத்தில் ஒன்றும் உறுதியாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.