திமுக கூட்டணி 95 இடங்களில் முன்னிலை; தந்தி டிவி சர்வே முடிவு இதோ!!

 

திமுக கூட்டணி 95 இடங்களில் முன்னிலை;  தந்தி டிவி சர்வே முடிவு இதோ!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது இதற்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றது. ஒருபுறம் அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளும், பரப்புரையும் என தமிழக அரசியல் களம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்க பல்வேறு தனியார் நிறுவனங்களும் ,ஊடகங்களும் 2021 ஆட்சியை பிடிப்பது யார் என்ற கருத்துக்கணிப்பை நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டு வருகிறது.

திமுக கூட்டணி 95 இடங்களில் முன்னிலை;  தந்தி டிவி சர்வே முடிவு இதோ!!

இந்த சூழலில் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான தந்தி டிவி 234 தொகுதிகளிலும் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்தியுள்ளது. அந்த வகையில் நேற்று வெளியிட்டுள்ள முடிவுகளில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் என்ற பட்டியலில் குன்னூர் ,கூடலூர், திருப்பூர் தெற்கு, அந்தியூர், ஈரோடு மேற்கு, கெங்கவல்லி, சேந்தமங்கலம், திருக்கோவிலூர் ,செங்கல்பட்டு ,சேலம் வடக்கு, திருச்செங்கோடு , மதுராந்தகம் உள்ளிட்ட தொகுதிகளை பட்டியலிட்டுள்ளது. அதேபோல் திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் வால்பாறை ,பவானிசாகர் ஆகிய தொகுதிகளில் வெற்றிபெறும் என்றும் கொங்கு மக்கள் தேசிய கட்சி திருச்செங்கோட்டில் ,மதிமுக மதுராந்தகத்திலும் வெற்றிபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் அதிமுக வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் என்ற பட்டியலில் மேட்டுப்பாளையம், திருப்பூர் வடக்கு, சூலூர், உடுமலைப்பேட்டை, கோயம்புத்தூர் ,வடக்கு கோபிசெட்டிபாளையம், அவினாசி, சேலம் தெற்கு ,பல்லடம், ஓமலூர், ஆத்தூர், குமாரபாளையம், பொன்னேரி, திருவள்ளூர், திருத்தணி ஆகிய தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. அதேபோல் சேலம் மேற்கு தொகுதியில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக வெற்றி வாய்ப்பைப் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவும் தொகுதிகளாக கவுண்டம்பாளையம் ,கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர், சங்ககிரி ,ஏற்காடு ,நாமக்கல், பெருந்துறை,ஈரோடு கிழக்கு ,கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை, திருப்போரூர் ,செய்யூர், பல்லாவரம், மதுரவாயல் ,ஆவடி ஆகிய தொகுதிகள் உள்ளன. இதில் கிணத்துக்கடவு ,தொண்டாமுத்தூர் ,சங்ககிரி, நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் அதிமுகவும், திருப்போரூரில் பாமகவும் முந்துகிறது.

3 ஆம் கட்டமாக 50 தொகுதிகளுக்கான கருத்து கணிப்பை வெளியிட்டுள்ள முடிவில் திமுக கூட்டணி 19 , அதிமுக கூட்டணிக்கு 16 தொகுதிகளில் வெற்றிபெறும் என்று கூறியுள்ளது. அத்துடன் மீதமுள்ள 15 தொகுதிகள் இழுபறியானவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 150 தொகுதிகளுக்கான கருத்துக்கணிப்புகளை தந்தி டிவி வெளியிட்டுள்ள நிலையில் திமுக கூட்டணி 95, அதிமுக கூட்டணி 31 தொகுதிகளில் வெற்றிபெறும் என்று கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.