ஆளுக்கு ஒன்னு! சோலிய முடிச்ச திமுக…. ஆனா கொமதேக கிட்ட பலிக்காது!!

 

ஆளுக்கு ஒன்னு! சோலிய முடிச்ச திமுக…. ஆனா கொமதேக கிட்ட பலிக்காது!!

தமிழகத்தில் அடுத்த மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2 ஆம் தேதி எண்ணப்படுகின்றன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து முன்னணி அரசியல் கட்சிகள் வேட்பாளர் தேர்வு, கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரச்சாரம் உள்ளிட்டவற்றில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3, மனிதநேய மக்கள் கட்சிக்கு 2, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மதிமுகவுக்கு தலா 6, காங்கிரஸ் கட்சிக்கு 25 உள்ளிட்ட தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. திமுக – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையேயான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை ஒருவாரமாக இழுபறியில் உள்ளது.

ஆளுக்கு ஒன்னு! சோலிய முடிச்ச திமுக…. ஆனா கொமதேக கிட்ட பலிக்காது!!

இந்நிலையில் திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் திமுக கூட்டணியில் ஆதி தமிழர் பேரவைக்கும் ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதிமுகவிலிருந்து பிரிந்த கருணாசின் முக்குலத்தோர் புலிப்படை திமுகவிற்கு ஆதரவு அளித்த நிலையில் அவர்களுக்கும் ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

திமுக மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி இடையே தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியுடன் நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படவில்லை, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தரப்பில் 6 தொகுதிகள் கேட்கும் நிலையில், திமுக தரப்பில் 3 தொகுதிகள் மட்டுமே வழங்க முன்வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.