சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி : நீண்ட இடைவெளிக்கு பிறகு களமிறங்கும் விஜயகாந்த்

சட்டமன்ற தேர்தலில்  யாருடன் கூட்டணி : நீண்ட இடைவெளிக்கு பிறகு களமிறங்கும் விஜயகாந்த்

விஜயகாந்த் தலைமையில் இன்று தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது.

சட்டமன்ற தேர்தலில்  யாருடன் கூட்டணி : நீண்ட இடைவெளிக்கு பிறகு களமிறங்கும் விஜயகாந்த்

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் பணிகளை தமிழகத்தின் பிரதான கட்சிகள் தொடங்கி விட்டன. திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைத்தல், காணொலி வாயிலாக பிரச்சாரம் மேற்கொள்ளுதல் என சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது . அதேபோல் அதிமுகவும் தேர்தல் பணிக்கான நிர்வாகிகளை நியமித்து பாஜகவுடன் கூட்டணி என்று அறிவித்துள்ளது. இந்த சூழலில் கமல்ஹாசன் மதுரையில் இன்று பிரச்சாரத்தைத் தொடங்கும் நிலையில், ரஜினிகாந்தும் சட்டமன்ற தேர்தல் போட்டியில் களமிறங்க உள்ளார்.

சட்டமன்ற தேர்தலில்  யாருடன் கூட்டணி : நீண்ட இடைவெளிக்கு பிறகு களமிறங்கும் விஜயகாந்த்

அந்த வகையில் விஜயகாந்தின் தேமுதிக கட்சி, தேர்தல் பணிகளை தொடங்காமல் இருந்தது. அதிமுகவுடன் தாங்கள் கூட்டணியில் தான் உள்ளோம் என்று கூறிய அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடும் அளவுக்கு தேமுதிகவிற்கு செல்வாக்கு உள்ளது என்றும் அதை தான் தொண்டர்களும் விரும்புகிறார்கள் என்றும் சூசகமாக தெரிவித்திருந்தார்.

சட்டமன்ற தேர்தலில்  யாருடன் கூட்டணி : நீண்ட இடைவெளிக்கு பிறகு களமிறங்கும் விஜயகாந்த்

இந்நிலையில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடக்கும் இந்த கூட்டத்திற்கு அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமை ஏற்கிறார். இதில், சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது, கூட்டணி அமைப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது