#BREAKING : அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறியது தேமுதிக!!

 

#BREAKING : அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறியது தேமுதிக!!

அதிமுக பாஜக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகியதாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

#BREAKING : அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறியது தேமுதிக!!

சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் பாஜக ,பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் இருந்தனர். இதில் பாமகவுக்கு 23, பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. 2011 ஆம் ஆண்டு ஜெ. தலைமையிலான அரசில் எதிர்க்கட்சி தலைவராக அமர்ந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் தரப்பிலிருந்து இந்த முறை தேமுதிகவுக்கு 40 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று கேட்கப்பட்டது. ஆனால் தேமுதிக கேட்ட தொகுதிகளை அதிமுக தரமறுத்தது. இதனால் 40 என்ற எண்ணிக்கையை 23 ஆக குறைத்து இறங்கி வந்தது தேமுதிக.ஆனால் அதற்கு அதிமுக மறுப்பு தெரிவித்து 13 தான் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி என்று கறாராக கூறிவிட்டது.தொகுதி பங்கீட்டில் நீடிக்கும் இழுபறி நீடித்து வந்ததால் மாவட்ட செயலாளர்களுடன் தேமுதிக அவசர ஆலோசனை கூட்டத்தை இன்று நடத்தியது.

#BREAKING : அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறியது தேமுதிக!!

இந்நிலையில் மாவட்ட செயலாளர் கூட்டத்தை தொடர்ந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” நடைபெற உள்ள 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிமுகவுடன் தொடர்ந்து மூன்று கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது . தேமுதிக சார்பில் கேட்கப்பட்ட எண்ணிக்கையும், தொகுதிகளையும் ஒதுக்க மறுத்து, ஒரு உடன்பாடு ஏற்படாத காரணத்தினால் மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் ஏற்பட்ட ஒற்றை கருத்துகளின் அடிப்படையில் இன்றிலிருந்து அதிமுக- பாஜக கூட்டணியிலிருந்து தேமுதிமுக விலகுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.