தேமுதிக சார்பில் போட்டியிட விருப்பம் காட்டாத தொண்டர்கள்!

 

தேமுதிக சார்பில் போட்டியிட விருப்பம் காட்டாத தொண்டர்கள்!

தேமுதிகவில் விருப்ப மனு மந்தமாக விநியோகம் செய்யப்பட்டுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. இந்த சூழலில் சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம், பாமக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் போட்டியிட விரும்புவோர் தங்கள் விருப்பமனுக்களை போட்டிப்போட்டுக்கொண்டு வாங்கி அதனை பூர்த்தி செய்து அளித்துவருகின்றனர். தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்களில் தேமுதிமுக சார்பில் போட்டியிட பிப்ரவரி 25 முதல் மார்ச் 3 வரை, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனு அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

தேமுதிக சார்பில் போட்டியிட விருப்பம் காட்டாத தொண்டர்கள்!

இந்நிலையில் கடந்த 3 நாட்களாக தேமுதிக தலைமை அலுவலகத்தில் விருப்பமனு விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஆனால் விருப்பமனு விநியோகம் மிகவும் மந்தமாகவே நடைபெறுகிறது. கடந்த 3 நாட்களில் தமிழகத்தில் மொத்தமாக 185 நபர்கள் மட்டுமே விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர்.