கண்டுகொள்ளாத அதிமுக: விஜயகாந்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!

 

கண்டுகொள்ளாத அதிமுக:  விஜயகாந்தின் அதிகாரப்பூர்வ  அறிவிப்பு இதோ!

சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக நாளை தேமுதிக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவுக்கு இந்த தேர்தல் கடும் நெருக்கடியை கொடுத்துள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜக 20, பாமக 23 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தேமுதிக கேட்கும் 25 தொகுதிகளுக்கு மறுப்பு கூறிவரும் அதிமுக 17 தொகுதிகள். 1 எம்.பி.சீட்டு வழங்க முன்வந்துள்ளது. தனித்து போட்டியிடலாம் என தேமுதிக தொண்டர்கள் கூறி வரும் நிலையில் தேமுதிக தலைமை குழப்பத்தில் உள்ளது. விஜயகாந்த் தீவிர அரசியலில் எடுபடாமல் உள்ள நிலையில் தனித்து நின்றால் வாக்கு சதவீதத்தை பெற முடியுமா என்று யோசிக்கிறது தேமுதிக.

கண்டுகொள்ளாத அதிமுக:  விஜயகாந்தின் அதிகாரப்பூர்வ  அறிவிப்பு இதோ!

இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நடைபெறவுள்ள 2021 சட்டமன்ற பொது தேர்தலை ஒட்டி மாவட்ட கழக செயலாளர்கள் அவசர ஆலோசனை கூட்டம் நாளை காலை 10.30 மணி அளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் நடைபெற உள்ளது .

கண்டுகொள்ளாத அதிமுக:  விஜயகாந்தின் அதிகாரப்பூர்வ  அறிவிப்பு இதோ!

மாவட்ட கழக செயலாளர் அனைவரும் ஆலோசனை கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது ‘என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதிமுக ஒதுக்கும் குறைவான தொகுதிகளை ஏற்கலாமா? வேண்டாமா என்பது பற்றி தேமுதிக ஆலோசிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் வேட்பாளர்கள் தேர்வு பற்றியும், தேமுதிக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.