புதுச்சேரியில் தனித்து களம் காணும் தேமுதிக.. அப்போ தமிழகத்தில்?

 

புதுச்சேரியில் தனித்து களம் காணும் தேமுதிக.. அப்போ தமிழகத்தில்?

தமிழகத்தின் சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி அரசியல் களம் அனல் பறக்கிறது. திடீர் கூட்டணி, கட்சி விலகல், வேட்பாளர் அறிவிப்பு என பரபரப்பாகவே நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது திடீர் திருப்பமாக அமைந்தது. ஜெயலலிதா காலத்தில் இருந்தே அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கும் தேமுதிகவின் மவுசு தற்போது குறைந்திருக்கிறது.

புதுச்சேரியில் தனித்து களம் காணும் தேமுதிக.. அப்போ தமிழகத்தில்?

இதனால் தேமுதிகவை கண்டு கொள்ளாத அதிமுக, பாமக மற்றும் பாஜகவுக்கு முன்னுரிமை கொடுத்து தொகுதி பங்கீட்டை இறுதி செய்தது. அதிமுகவின் இந்த நடவடிக்கை தேமுதிகவினரை அப்செட் அடையச் செய்தது. இருந்தாலும் கூட்டணி பேச்சுவார்த்தையை தேமுதிக தொடர்ந்தது. 50 இல் இருந்து 25க்கு இறங்கி வந்த தேமுதிகவுக்கு 13 முதல் 17 தொகுதிகளை மட்டுமே கொடுக்க அதிமுக முன்வந்தது. இதில் ஆத்திரமடைந்த தேமுதிக, கூட்டணியை முறித்துக் கொண்டு வெளியேறிவிட்டது.

புதுச்சேரியில் தனித்து களம் காணும் தேமுதிக.. அப்போ தமிழகத்தில்?

2011ம் ஆண்டில் மாபெரும் கட்சியான திமுகவை வீழ்த்தி எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்தவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த். அக்காலத்தில் மக்கள் மத்தியில் பேராதரவு கொண்டிருந்த தேமுதிகவுக்கு, இப்போது 25 தொகுதிகள் கூட கொடுக்க அதிமுக முன்வராதது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகியுள்ளது.

இந்த நிலையில், புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் 30 தொகுதிகளிலும் தேமுதிக தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் மாநில செயலாளர் விபிபி வேலு அறிவித்திருக்கிறார். தமிழக சட்டமன்றத் தேர்தலை தேமுதிக தனித்து களம் காணுமா? அல்லது வேறு ஏதேனும் கட்சியுடன் கூட்டணி அமைக்குமா? என்பது புரியாத புதிராகவே இருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.