தேனி மாவட்டத்தில் கிராமப்புற காவலர் திட்டம் தொடக்கம்

 

தேனி மாவட்டத்தில் கிராமப்புற காவலர் திட்டம் தொடக்கம்

தேனி

தேனி மாவட்ட கிராமப்புறப் பகுதிகளில் பொதுமக்களுக்கும், காவல்துறைக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக கிராமப்புற காவலர்கள் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இதனையொட்டி, நேற்று தேனி கொடுவிலார்பட்டி கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் தென்மண்டல ஐ.ஜி., முருகன், திண்டுக்கல் டிஐஜி முத்துச்சாமி மற்றும் மாவட்ட எஸ்.பி., சாய்சரண் தேஜஸ்வி ஆகியோர் கலந்துகொண்டு, காவலர்களுக்கு நியமன ஆணைகளை வழங்கினர்.

தேனி மாவட்டத்தில் கிராமப்புற காவலர் திட்டம் தொடக்கம்

அதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய ஐஜி முருகன், தேனி மாவட்டத்தில் உள்ள 146 தாய் கிராமங்களுக்கும், கிராம விழிப்புணர்வு காவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர் என்றும், கிராமத்தில் உள்ள முக்கிய பிரச்சினைகள், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்து புகார்கள் குறித்தும் காவலர்களின் வாட்ஸ்அப் எண்ணிற்கு உடனடியாக தகவல் அளிக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.

தேனி மாவட்டத்தில் கிராமப்புற காவலர் திட்டம் தொடக்கம்

மேலும், இனி வரும் காலங்களில் பொதுமக்கள் காவல் நிலையங்களை தேடி வரத் தேவையில்லை என்றும், கிராம விழிப்புணர்வு காவலர்கள்
பொதுமக்களை தேடி வரப் போகின்றனர் என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் எஸ்.பிக்கள் ராஜேந்திரன், சங்கரன், டிஎஸ்பிக்கள் முத்துராஜ், ரமேஷ் உட்பட ஏராளமான காவல் துறையினரும், கிராம பொதுமக்களும் கலந்துகொண்டனர்.