நாமக்கல் அருகே காதல் விவகாரத்தில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

 
suicide

நாமக்கல் அருகே காதல் தோல்வியால் இளைஞர் அடுக்குமாடி குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கே.கே.வலசு பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன் வீரமணி(26). கூலி தொழிலாளி. இவர் மணியனூர் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பின் 2-வது மாடியில் ஜன்னல் கம்பில் தூக்கிட்டு துற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர் அளித்த தகவலின் பேரில் நல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, வீரமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வீரமணியின் உறவினர்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

namakkal GH

அதில் வீரமணி, அந்த அடிக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 17 வயது சிறுமியை காதலித்து வந்ததும், இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் அவரை கண்டித்ததும் தெரியவந்தது. இதனால் விரக்தி அடைந்த வீரமணி, நல்லூர் பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்று கத்தியால் கை கிழித்துக்கொண்டுள்ளார். இதனை அடுத்து,  பொதுமக்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்சில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அப்போது, கண்ணாடியை உடைத்துக்கொண்டு வீரமணி தப்பிச்சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.