பேருந்து நிலையத்தில் இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

 
sulagiri

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பேருந்து நிலையத்தில் இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள உலகம் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி. கூலி தொழிலாளி. இவருக்கு சமீபத்தில் ஆஷா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. தற்போது ஆஷா 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு மூர்த்திக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டு ரத்த வாந்தி எடுத்துள்ளார். இதனை அடுத்து, குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு  மினி பேருந்தில் அழைத்துச் சென்றனர்.

krishnagiri
சூளகிரி பேருந்து நிலையத்தில் வந்து இறங்கியபோது மூர்த்தி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதனை கண்டு அவரது உறவினர்கள் கதறி அழுதனர். இது சூளகிரி பேருந்து நிலையம் பகுதியில் இருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த சம்பவம் குறித்து சூளகிரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.