கல்விக்கடனை செலுத்த முடியாத விரக்தியில் இளைஞர் தற்கொலை!

 
suicide

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே கல்விக்கடனை திருப்பி செலுத்த முடியாத வேதனையில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள பெரிய கொள்ளியூர் கிராமத்தை சேர்ந்தவர் அலமேலு. இவரது மகன் ஆனந்த் (23). இவர் பிபிஏ படித்துவிட்டு கோவையில் தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பணியில் இருந்து விலகி சொந்த ஊருக்கு வந்துவிட்டார். இந்த நிலையில், ஆனந்த் தனது படிப்பு செலவிற்காகவும், சகோதரிகளின் திருமண செலவிற்காகவும் தனியார் அறக்கட்டளை ஒன்றில் கடன் பெற்றிருந்தார்.

kallakurichi ttn

வேலையில் இருந்து விலகியதால் வருமானமின்றி தவித்த ஆனந்த், கடனை கட்ட முடியாமல் தவித்து வந்துள்ளார். இதனால், மனமுடைந்து காணப்பட்ட அவர், கிராமத்திலுள்ள முனியப்பன் கோவில் வளாகத்தில் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த பகண்டை கூட்டுச்சாலை காவல் நிலைய போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த தற்கொலை சம்பவம் குறித்து ஆனந்தின் தாயார் அலமேலு அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கல்விக்கடனை திருப்பி செலுத்த முடியாததால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.