புளியம்பட்டி அருகே கீழ்பவானி வாய்க்காலில் குதித்து வாலிபர் தற்கொலை!

 
dead

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே கீழ்பவானி வாய்க்காலில் குதித்து தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி, பவானிசாகர் ரோடு, குமரன் தெருவை சேர்ந்தவர் செந்தில் (32). இவரது மனைவி நித்யா. செந்தில் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், செந்தில் கடந்த 2 ஆண்டுகளாக சிறுநீரகத்தில் கல் ஏற்பட்டு கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். எனவே சம்பவத்தன்று திருப்பூருக்கு வேலைக்கு செல்வதாக செந்தில் மனைவியிடம் கூறிவிட்டு சென்றார். ஆனால் அவர் வேலைக்கு செல்லவில்லை. 

police

இந்த நிலையில், நித்யாவுக்கு செந்தில் வேலை செய்யும் கம்பெனியின் உரிமையாளர் போன் செய்து நேற்று உங்கள் கணவர் வேலைக்கு வரவில்லை என்று கூறியுள்ளார். இதனால், சந்தேகமடைந்த நித்தியா கணவரை பல்வேறு இடங்களில் தேடினார். அப்போது, சத்தியமங்கலம் அடுத்த செண்பகபுதூர் வாய்க்காலில் செந்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக நித்யாவுக்கு தகவல் கிடைத்தது.

இதுகுறித்து, புளியம்பட்டி போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கீழ்பவானி வாய்க்காலில் இறங்கி செந்திலின் உடலை மீட்டனர். பின்னர், அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து புளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.