திண்டுக்கல் அருகே கோவில் சிலையை உடைத்த இளைஞர் கைது!

 
statue

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே மதுபோதையில் விநாயகர் சிலையை உடைத்து சேதப்படுத்திய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அடுத்த தென்னம்பட்டி குரும்பபட்டியில் விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் உள்ள விநாயகர் சிலை உடைக்கப்பட்டு கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், இதுகுறித்து வடமதுரை காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன்(23) என்பவர், கோவிலில் அமர்ந்து மது அருந்தியபோது சிலைகளை உடைத்து சேதப்படுத்தியது தெரியவந்தது.

dindigul

இதனை அடுத்து, பாலகிருஷ்ணனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சிலைகளை சேதப்படுத்தியதை அவர் ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து, வடமதுரை போலீசார், பாலகிருஷ்ணன் மீது சிலைகளை சேதப்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து, அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.