ஈரோடு அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை!

 
suicide

ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி அருகே தனியார் குடோனில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி காந்தி நகரை சேர்ந்தவர் ராஜன் (40). தொழிலாளி. இவருக்கு லட்சுமி என்ற பெண்ணுடன் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆனது. கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 12 வருடங்களுக்கு முன்பு ராஜன் தனது மனைவியை பிரிந்து தனது அண்ணன் ஜோதியுடன் வசித்து வந்தார்.

police

ராஜனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அடிக்கடி ராஜன் எனக்கு அப்பாவும் இல்லை, அம்மாவும் இல்லை, மனைவியும் பிரிந்து சென்றுவிட்டார் என்று கூறி வேதனை அடைந்து வந்துள்ளார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி வந்துள்ளனர். இந்த நிலையில், சம்பவத்தன்று  உறவினர் குடோனில் ராஜன் தூங்க சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வராததால் சந்தேகம் அடைந்த அவரது அண்ணன் ஜோதி, குடோனுக்கு சென்று பார்த்தார்.

அப்போது, ராஜன் தூக்கு மாட்டி இருப்பதைக் கண்டு  அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ராஜனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ராஜன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.