கோவையில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி அடித்துக்கொலை!

 
murder

கோவை தியாகி குமரன் மார்க்கெட்டில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கூலி தொழிலாளி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கோவை கரும்புக்கடை அடுத்து உள்ள சாரமேடு பகுதியை சேர்ந்தவர் யூசுப் (54). இவர் தியாகி குமரன் மார்க்கெட்டில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவருடன் கேரளாவை சேர்ந்த நாசர் (47) என்பவரும் தொழிலாளி ஆக பணிபுரிந்து வந்தார். இதனிடையே, யூசூப் கைசெலவிற்காக சக தொழிலாளி ஆன நாசரிடம் பணம் வாங்கி உள்ளார். ஆனால் கூறியபடி பணத்தை திருப்பி தரமால் காலம் தாழ்த்தி வந்தார். இதுதொடர்பாக அவருக்கும், நாசருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

coimbatore gh

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு இருவரும் மார்க்கெட்டில் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். மதுபோதையில் இருந்த இருவருக்கும் இடையே கடனை திருப்பி கொடுப்பது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த இருவரும் உருட்டு கட்டையினால் ஒருவரை ஒருவர் சரமாரியாக கொண்டுள்ளனர். இதில், பலத்த காயமடைந்த இருவரும் அங்கு மயங்கி கிடந்துள்ளனர். அந்த வழியாக சென்றவர்களை இதனை கண்டு 2 பேரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

அங்கு மருத்துவர்கள் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், யூசுப் பரிதாபமாக உயிரிழந்தார். நாசருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து கோவை பெரியக்கடை வீதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.