திருச்சி அருகே லாரி உரிமையாளர் அடித்துக்கொலை.. உடலை ஏரியில் வீசிச்சென்ற மர்மநபர்கள்!

 
murder

திருச்சி அருகே லாரி உரிமையாளர் மர்மநபர்களால் அடித்துக் கொல்லப்பட்டு, உடல் ஏரியில் வீசிப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் அருகே உள்ள கன்னியாகுடியை சேர்ந்தவர் சதீஷ்குமார்(32). இவர் சொந்தமாக லாரி வைத்து, தொழில் நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி லோகேஷ்வரி என்ற மனைவியும், இரண்டரை வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். சதீஷ்குமார், தற்போது மணச்சநல்லூர் காந்திநகர் 7-வது குறுக்கு சாலையில் வசித்து வந்தார்.

murder

இந்த நிலையில், நேற்று காலை வடக்கு ஈச்சம்பட்டியில் உள்ள வறட்டு ஏரியில், சதீஷ்குமார் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், அடித்துக் கொல்லப்பட்டு சடலமாக மிதந்தார். இதுகுறித்து அந்த பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் மணச்சநல்லூர் போலீசார் மற்றும் சமயபுரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஏரியில் மிதந்த சதீஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவல் அறிந்த திருச்சி மாவட்ட எஸ்.பி சுஜித்குமார், ஜீயபுரம் டிஎஸ்பி ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, இந்த கொலை சம்பவம் குறித்து மணச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சதீஷ்குமாரை கொலை செய்த நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.