திருச்சி- ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகள் – தீக்குளிக்க முயன்ற பொதுமக்கள் !

திருச்சி- ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகள் – தீக்குளிக்க முயன்ற பொதுமக்கள் !

திருச்சி

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே குளத்து புறம்போக்கு ஆக்கிரமிப்பை அதிகாரிகள் அகற்ற வந்த நிலையில், அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

விராலிமலை அருகே உள்ளது கொடும்பாளூர் சத்திரம் என்ற கிராமம். அங்கு இரண்டு ஏக்கர் பரப்பளவில் அமைந்த சத்திரக் குளத்தை ஆக்கிரமித்து சுமார் 25 க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் 10 க்கும் மேற்பட்ட கடைகள் கட்டப்பட்டுள்ளன.

திருச்சி- ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகள் – தீக்குளிக்க முயன்ற பொதுமக்கள் !

நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி, அந்த ஊரைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில், குளத்து ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருச்சி- ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகள் – தீக்குளிக்க முயன்ற பொதுமக்கள் !

இதையடுத்து, வருவாய் துறை, உள்ளாட்சி துறை அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பை அகற்ற வருகை வந்தனர். அப்போது பொதுமக்கள் அதிகாரிகள் வந்த வனங்களை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி- ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகள் – தீக்குளிக்க முயன்ற பொதுமக்கள் !

ஜேசிபி மூலம் வீடுகளை இடிக்க முயன்றபோது, பொதுமக்கள் உடலில் மண்ணென்ணை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்களின் கடும் எதிர்ப்பால் அதிகாரிகள் பணிகளை நிறுத்தி பேச்சு வார்த்தை நடத்தினர். கொரோனா ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரத்திற்கே போராடும் நிலையில், பொதுமக்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்துவிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.