கிராமத்து இளைஞர்களின் போலீஸ் கனவை நிறைவேற்றும் “மிஸ்டர் தமிழ்நாடு”

 

கிராமத்து இளைஞர்களின் போலீஸ் கனவை நிறைவேற்றும் “மிஸ்டர் தமிழ்நாடு”

திருச்சி

திருச்சியில் அகில இந்திய ஆணழகன் போட்டியில் பதக்கம் வென்ற இளைஞர் வளர்ச்சி குறைபாட்டால் ராணுவத்தில் சேர முடியாததால், கிராமத்து ஏழை, எளிய இளைஞர்களின் காவலராகும் கணவை நனவாக்கி வருவது அனைவரது பாரட்டுதலையும் பெற்றுள்ளது.

கிராமத்து இளைஞர்களின் போலீஸ் கனவை நிறைவேற்றும் “மிஸ்டர் தமிழ்நாடு”

திருச்சி மாவட்டம், திருச்செந்துரை பஞ்சாயத்து செந்தமிழ்புரம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவர், ஆணழகன் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற வேண்டும் என இளமை பருவம் முதலே உடற்பயிற்சி கூடத்தில் சேர்ந்து பல வருடங்களாக பயிற்சி பெற்று வந்துள்ளார். இந்நிலையில், 2005ஆம் ஆண்டு மிஸ்டர் திருச்சி பட்டம் வென்ற அவர், 2008 முதல் 2010 வரை தொடர்ந்து 3 ஆண்டுகள் மிஸ்டர் தமிழ்நாடு பட்டமும் வென்றார். இதேபோல், தென்னிந்திய ஆணழகன் போட்டியில் வெண்கலம் பதக்கமும், அகில இந்திய ஆணழகன் போட்டியில் வெள்ளி பதக்கமும் பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை தேடி தந்தார்.

கிராமத்து இளைஞர்களின் போலீஸ் கனவை நிறைவேற்றும் “மிஸ்டர் தமிழ்நாடு”

இந்திய அளவில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்ற பிரபாகரனது, ராணுவத்தில் சேறும் கனவு, உயரம் குறைவு காரணமாக நிறைவேறாத
நிலையில், வயது மூப்பு காரணமாக ரெயில்வே துறையிலும் பணியாற்றும் வாய்ப்பு பறிபோனது. இதனால், தன்னை போன்று சாதிக்க எண்ணம் இருந்து,
அதற்கான வழிமுறைகள் மற்றும் பயிற்சிகள் கிடைக்காமல் ஏங்கும் கிராமத்து ஏழை, எளிய இளைஞர்களை தற்போது தான் விரும்பிய பணிகளில் அதற்கான
பயிற்சிகளை அளித்து பணியமர்த்தி வருகிறார்.

கிராமத்து இளைஞர்களின் போலீஸ் கனவை நிறைவேற்றும் “மிஸ்டர் தமிழ்நாடு”

இதற்காக முக்கொம்பு சுற்றுலா மையத்தில் காலை, மாலை இருவேளைகளிலும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த இளைஞர்களுக்கும், யுவதிகளுக்கும்
உடல்பயிற்சி, முன்கள பயிற்சி, கயிறு ஏறுதல், ஓட்டம் மற்றும் நீளம் தாண்டுதல் என பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறார். மேலும், உடற்பயிற்சி
கூடங்களில் பர்சனல் ஆலோசகராக பலருக்கு பயிற்சி அளித்து, அதில் வரும் வருவாயைக் கொண்டு இளைஞர்களுக்கு புரதப் பொருட்கள், ஷு போன்றவற்றைவாங்கி கொடுத்து, சிறந்த பயிற்சியும், ஊக்கமும் அளித்து வருகிறார். தற்போது இவரிடம் பயிற்சி பெற்ற, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் காவல் துறையில் சேர்ந்து பணியாற்றி வருகின்றனர். மேலும், தேசிய அளவிலான ஆணழகன் போட்டியில் பங்கேற்று பலரும் வெற்றி பெற்று வருகின்றனர்.

கிராமத்து இளைஞர்களின் போலீஸ் கனவை நிறைவேற்றும் “மிஸ்டர் தமிழ்நாடு”

இளைஞர்களை தனது பயிற்சியினால் தீரர்களாக உருவாக்கி காவல்துறையில் அவர்களை பணியமர்த்தி, மிடுக்குடன் காக்கிசட்டை அணிந்து வந்து சல்யூட்
அடிக்கும்போது, தனது கவலைகள் எல்லாம் மறந்து விடுவதாக கூறும் பிரபாகரன், கிராமப்புறங்களில் உள்ள துடிப்பான இளைஞர்கள் பயிற்சி பெற ஏதுவாக, அரசு திறந்தவெளி உடற்பயிற்சி மையங்களை ஏற்படுத்தினால், அவர்கள் காவல்துறை மற்றும் ராணுவ வேலை வாய்ப்புகளில் முத்திரை பதிக்க முடியும் எனவும், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.