திருப்பூர் வடக்கு அதிமுக எம்எல்ஏ விஜயகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி!

 
admk mla

திருப்பூர் வடக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ விஜயகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ-வாக உள்ளவர், அதிமுகவை சேர்ந்த விஜயகுமார். இவர் திருப்பூர் பெரியார் காலனி ஜே.எஸ்.கார்டன் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக எம்எல்ஏ விஜயகுமாருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனை அடுத்து, அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

corona

அதில் அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து, அவர் சிகிச்சைக்காக திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே, எம்எல்ஏ விஜயகுமார் குடும்பத்தினர் மற்றும் கடந்த 3 நாட்களில் அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறையினர் முடிவெடுத்து உள்ளனர்.