அர்ச்சகர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.10 லட்சம் மதிப்பிலான ஐம்பொன் சிலை கொள்ளை

 

அர்ச்சகர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.10 லட்சம் மதிப்பிலான ஐம்பொன் சிலை கொள்ளை

திருப்பத்தூர்

ஆம்பூர் அருகே கோயில் அர்ச்சகர் வீட்டின் பூட்டை உடைத்து 10 லட்சம் மதிப்பிலான பஞ்சலோக அம்மன் சிலை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வெங்கிளி பகுதியில் ஸ்ரீதேவி கருமாரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை மாதனூர் தேவிகபுரத்தை சேர்ந்த ராகவேந்திரன் என்பவர் நிர்வகித்து வருகிறார். இவர் பாதுகாப்பு கருதி கோயிலுக்கு சொந்தமான 10 லட்சம் மதிப்பிலான 170 கிலோ எடையிலான பஞ்சலோக அம்மன் சிலையை, தனது வீட்டில் வைத்து பாதுகாத்து வந்துள்ளார்.

அர்ச்சகர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.10 லட்சம் மதிப்பிலான ஐம்பொன் சிலை கொள்ளை

இதனிடையே கடந்த வாரம் ராகவேந்திரனின் வீட்டில் நிறுத்தப்பட்ட அவரது சகோதரர் சீனிவாச பாரதி என்பவரின் ஆட்டோ மாயமானது. இதுகுறித்து புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன், ராகவேந்திரன் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் குடியாத்தம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அர்ச்சகர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.10 லட்சம் மதிப்பிலான ஐம்பொன் சிலை கொள்ளை

நேற்று மாலை தேவிகாபுரம் திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த பஞ்சலோக அம்மன் சிலை திருடுபோனது தெரியவந்தது. மேலும், பூஜை பொருட்கள், விலை உயர்ந்த பட்டு புடவைகளும் கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து, ராகவேந்திரன் அளித்த புகாரின் பேரில் ஆம்பூர் கிராமிய காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.