ஜாதி சான்றிதழ் வழங்கக் கோரி இருளர் இன மக்கள் மனு

 

ஜாதி சான்றிதழ் வழங்கக் கோரி இருளர் இன மக்கள் மனு

திருப்பத்தூர்

திருப்பத்தூரில் குரும்பர் இன மக்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கக் கோரி 500-க்கும் மேற்பட்டவர்கள், சார் ஆட்சியரிடம் வழங்கினர். திருப்பத்தூர் மாவட்டத்தில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட குறும்பர் இனமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுடைய குழந்தைகளின் பள்ளி படிப்பிற்கும், வேலைவாய்ப்புக்கும் தேவையான சாதி சான்றிதழை, எஸ்.டி பிரிவின் கீழ் வழங்கக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால், குரும்பர் இனமக்களுக்கு எஸ்.டி., சான்றிதழ் அதிகாரிகள் வழங்க மறுத்து வருகின்றனர்.

ஜாதி சான்றிதழ் வழங்கக் கோரி இருளர் இன மக்கள் மனு

இந்த நிலையில், குரும்பர் இன மாநில தலைவர் கொடி அண்ணன் தலைமையில், இன்று திருப்பத்தூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் 500-க்கும் மேற்பட்டவர்கள் மனு கொடுக்க வந்திருந்தனர்.இதனால், அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்ட நிலையில், போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர். தொடர்ந்து, கொடிஅண்ணன் உள்ளிட்டோர் சார் ஆட்சியர் வந்தனா கார்கை சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினார். மனு குறித்து ஆய்வுசெய்து, ஒரு வார காலத்தில் முடிவை தெரிவிப்பதாக சார் ஆட்சியர் கூறினார்