தருமபுரி அருகே குடோனில் பதுக்கிய ரூ.3 லட்சம் குட்கா பறிமுதல் - மூவர் கைது!

 
dharmapuri

தர்மபுரி அருகே குடோனில் பதுக்கிவைத்திருந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக 3 பேரை கைது செய்தனர்.

தர்மபுரி மாவட்டம் தடங்கம் பகுதியில் உள்ள வீட்டில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் பதுக்கி, விற்பனை செய்யப்படுவதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், தர்மபுரி கோட்ட டிஎஸ்பி வினோத் தலைமையில் அதியமான்கோட்டை போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டை சுற்றி வளைத்து சோதனை செய்தனர். அப்போது, வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் மூட்டை மூட்டையாக  பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. 

arrest

இதனை அடுத்து, சுமார் 40 மூட்டைகளில் இருந்த 900 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் 3 லட்சம் ஆகும். இதுதொடர்பாக, குட்காவை பதுக்கிய மிட்டாநுளஅள்ளியை சேர்ந்த பிரபாகரன் (21), அவரது தந்தை நரசிம்மன் மற்றும் குமாரசாமிபேட்டையை சேர்ந்த மனோஜ் (22) ஆகியோரை கைது செய்தனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.